×

திருச்சி எம்பி தொகுதி தேமுதிக வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து விஜய பிரபாகரன் பிரசாரம்

திருச்சி, ஏப்.3:  திருச்சி எம்பி தொகுதி தேமுதிக வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து விஜயபிரபாகரன் பிரசாரம் மேற்கொண்டார். தேசிய ஜனநாயக கூட்டணியின் திருச்சி நாடாளுமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். திருச்சி பாலக்கரை, எடத்தெரு, அண்ணாசிலை முன்பு நடந்த பிரசாரத்தில் அவருடன் கலந்துகொண்ட அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேசுகையில், நேர்மையான இந்த கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் என்றார். அவரை தொடர்ந்து விஜயபிரபாகரன் பேசுகையில், கடந்த முறை மோடி அலை வீசியது. தற்போதும் நிச்சயம் மோடி அலை வீசும் என்றார். பின்னர் வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.

Tags : Vijay Prabhakaran ,TRC ,
× RELATED அச்சு ஊடகத்துக்கு நிவாரணம்: பிரதமருக்கு மதுரை எம்பி கடிதம்