×

மணப்பாறை, லால்குடி அருகே வாகன சோதனையில் ரூ.3.90 லட்சம் பறிமுதல்

மணப்பாறை, ஏப்.3:  மணப்பாறை, லால்குடி அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.3.90 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. நாடாளுமன்ற பொதுத்தேர்தலையொட்டி தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், மணப்பாறையில் நேற்று பறக்கும் படை அலுவலர் சற்குணம், உதவி காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது லஞ்சமேடு அருகே வந்த டூவீலரை மறித்து சோதனை செய்தபோது மதுரையை சேர்ந்த முத்துக்குமார், மணப்பாறை சுற்றியுள்ள கிராமங்களில் மகளிர் சிறு கடன்களை வசூல் செய்த ரூ.2.30,730 ரொக்கம் உரிய ஆவணமின்றி வைத்திருந்ததால் அதனை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

லால்குடி:  லால்குடி அருகே கல்லக்குடி-மால்வாய் சாலையில் தேர்தல் பறக்கும் படை  அதிகாரி செல்வராஜ் மற்றும் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது   அனைப்பாடி கிராமத்தை சேர்ந்த முத்துசாமி மகன் கந்தசாமி மொபட்டில்   சென்றபோது அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் உரிய ஆவணங்கள் இன்றி  கொண்டு  வரப்பட்ட ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்தை கைப்பற்றி தாசில்தார் சத்திய  பாலகங்காதரன் முன்னிலையில் லால்குடி கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

Tags : vehicle test ,Lalgudi ,Marlpara ,
× RELATED ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை...