×

டெல்டா வைரசை விட பல மடங்கு வீரியம்; மக்களை புதிதாக மிரட்டும் ‘மு’: பரிசோதனையில் கூட சிக்காமல் தீவிரமாக தாக்கும்

புதுடெல்லி: கொரோனா வைரஸ் புதுப்புது மரபணு மாற்றத்துடன் உலகை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. ஆல்பா உள்ளிட்ட மரபணு மாற்ற வைரஸ்கள் 190 நாடுகளிலும், டெல்டா வைரஸ் 170 நாடுகளிலும் பரவியுள்ளன. கொலம்பியாவில் கடந்த ஜனவரியில் பி.1.621 என்ற புதிய பிறழ்வு கண்டறியப்பட்டது. முதலில் இந்த வைரஸ் தடுப்பூசியை தாண்டி தாக்கும் என கூறப்பட்டிருந்தது. . இந்நிலையில், இந்த புதிய வகை வைரசுக்கு உலக சுகாதார நிறுவனம் ‘மு’ (Mu) என பெயரிட்டுள்ளது. மேலும், இது ‘கவனிக்கப்படும்’ பிரிவை சேர்ந்ததாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, தீவிர தொற்றை ஏற்படுத்தக் கூடியது, நோய் எதிர்ப்பு சக்தியிலிருந்து தப்பிக்கக் கூடியது, வேகமாக பரவக்கூடியது, நோய் அறிதலில் இருந்து தப்பிக்கக் கூடியது போன்ற பண்புகளைக் கொண்டதாகும். இதே போல், தென் ஆப்ரிக்காவில் சமீபத்தில் சி.1.2 என்ற புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டது. இதற்கு உலக சுகாதார நிறுவனம் இன்னும் பெயரிடவில்லை. இந்த புதிய வகை இந்தியாவில் யாருக்கும் கண்டறியப்படவில்லை என ஒன்றிய சுகாதார அமைச்சகம் கூறி உள்ளது….

The post டெல்டா வைரசை விட பல மடங்கு வீரியம்; மக்களை புதிதாக மிரட்டும் ‘மு’: பரிசோதனையில் கூட சிக்காமல் தீவிரமாக தாக்கும் appeared first on Dinakaran.

Tags : New Delhi ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு