×

புதுப்பாக்கம் ஊராட்சி சார்பில் பள்ளிக் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள்

திருப்போரூர்: புதுப்பாக்கம் ஊராட்சி செயலர், அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினார். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் புதுப்பாக்கம் ஊராட்சியில், நேற்று பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் திறக்கப்பட்டன. இதையொட்டி,  ஊராட்சி செயலர் ஏழுமலை ஏற்பாட்டில் புதுப்பாக்கம்  அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் 9 மற்றும் 10ம் மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம், பேனா, பென்சில், ஸ்கேல், ரப்பர், ஷார்ப்னர், முகக்கவசம், கிருமி நாசினி, சோப்பு ஆகியவைகள்  வழங்கப்பட்டன.இதனை தொடர்ந்து பள்ளிக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் தலைமை ஆசிரியர் மோகனரங்கனிடம் வழங்கப்பட்டன. இதையடுத்து, புதுப்பாக்கம் ஈச்சங்காடு ஆகிய பகுதிகளில் உள்ள  அங்கன்வாடி மையங்களுக்கு, கொரோனா பாதுகாப்பு உபகரணங்களும், குழந்தைகளுக்கு தேவையான தட்டு, டம்ளர், கழிப்பறை சுத்தப்படுத்தும் பொருட்களும் ஊராட்சி செயலாளர் வழங்கினார்….

The post புதுப்பாக்கம் ஊராட்சி சார்பில் பள்ளிக் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் appeared first on Dinakaran.

Tags : Puducherry Panchayat ,Tirupporur ,Pudupakkam ,Panchayat ,Government Adi Dravidar Welfare High School ,Anganwadi Centers ,Chengalpattu ,Dinakaran ,
× RELATED 24 விநாடிகளில் 50 எழுத்துகளை தட்டச்சு...