×

பாப்பாரப்பட்டி பகுதியில் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

தர்மபுரி, ஏப்.3: தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக ேவட்பாளர் டாக்டர் செந்தில்குமார், பாப்பாரப்பட்டி பகுதியில், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக சார்பில் டாக்டர் டிஎன்வி எஸ்.செந்தில்குமார் போட்டியிடுகிறார். இவர், தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். அதன்படி, பென்னாகரம் வட்டத்தில், ஏ.பாப்பாரப்பட்டி, தொட்லாம்பட்டி, பிக்கிலி, கொல்லப்பட்டி, பெரியூர், பூதிநத்தம், அம்மன் நகர், புதுக்கரம்பு, தண்டுகாரனஅள்ளி, கூக்குட்ட மருதஅள்ளி, திருமல்வாடி, கிட்டம்பட்டி, எட்டியாம்பட்டி, பள்ளிப்பட்டி, கருப்பன அள்ளி, மாங்கரை, மோட்டுப்பட்டி உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட கிராமங்களில் தீவிர வாக்கு சேகரித்தார்.


நிகழ்ச்சிகளில் திமுக வேட்பாளர் டாக்டர் டிஎன்வி எஸ்.செந்தில்குமாரை ஆதரித்து, தர்மபுரி மாவட்ட திமுக செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்எல்ஏ, பென்னாகரம் எம்எல்ஏ இன்பசேகரன் ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதில், ஒன்றிய செயலாளர் செல்வராஜ், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் தேவராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாதன், காங்கிரஸ் வட்டார தலைவர் சண்முகம், பென்னாகரம் ஒன்றிய செயலாளர் செல்வாராஜ், பாப்பாரப்பட்டி பேரூர் கழக செயலாளர் வி.சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags : DMK ,candidate ,Papparapatti ,area ,
× RELATED மோடியிடமிருந்து இந்தியாவை...