×

பாகலூரில் விவசாயியிடம் ₹3.98 லட்சம் பறிமுதல்

ஓசூர், ஏப்.3: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தமிழக-கர்நாடக எல்லை ஓசூரில் பறக்கும்படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று ஓசூர் நகர நிலவரித்திட்டம் தனி தாசில்தார் கோவிந்தராஜன் தலைமையிலான பறக்கும்படையினர், கர்நாடக மாநில எல்லையான பாகலூர் சோதனைச்சாவடி அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.  அந்த காரில் ₹3.98 லட்சம் இருந்தது. இதையடுத்து, காரில் வந்த ஓசூர் அடுத்த பேரிகையைச் சேர்ந்த நாராயணப்பா மகன் விவசாயி நாகராஜிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஆனால், அவரிடம் ₹3.98 லட்சத்துக்கு உரிய ஆவணம் இல்லை. இதையடுத்து, பணத்தை பறிமுதல் செய்த பறக்கும்படையினர், ஓசூர் இடைத்தேர்தல் அலுவலர் ஆர்டிஓ விமால்ராஜிடம் ஒப்படைத்தனர். அவர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Tags : Bhagalpur ,
× RELATED பீகாரில் விஷச்சாராயம் குடித்து 16 பேர் பலி