×

பொருட்காட்சி திறப்பு

அருப்புக்கோட்டை. ஏப். 3: அருப்புக்கோட்டை நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட முத்துமாரியம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு எஸ்பிகே கல்வி நிறுவனங்களின் வளர்ச்சிக்காக 37வது பொருட்காட்சி திறப்பு விழா நடைபெற்றது.  எஸ்பிகே கல்லூரிச் செயலாளர் சங்கரசேகரன் வரவேற்றார்.  நாடார்கள் உறவின் முறை தலைவர் சுதாகர் தலைமை வகித்து, பொருட்காட்சியை திறந்து வைத்து பேசினார். நிகழ்ச்சியில் உறவின்முறை செயலாளர் ராஜமாணிக்கம், அமுதலிங்கேஸ்வரர் தேவஸ்தான டிரஸ்டி கணேசன், உறவின்முறை உதவி தலைவர் சுரேஷ்குமார், அம்பலகாரர் பிரேம்குமார், எஸ்பிகே பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயலாளர் கனகராஜ், எஸ்பிகே துவக்கப்பள்ளி செயலாளர் சரவணன், இன்டர்நேஷனல் பள்ளி செயலாளர் ராஜேஸ்குமார், கேஎஸ்எஸ் தியாகராஜன் நினைவு மருத்துவமனை மற்றும் தையல்பயிற்சி பள்ளி செயலாளர் பிரசாத், பொருட்காட்சி உதவி தலைவர் ராஜமாணிக்கம், வர்த்தக சங்க செயலாளர் பாபு மற்றும் உறவின்முறை நிர்வாகிகள், வர்த்தக சங்க உறுப்பினர்கள், எஸ்பிகே கல்விக்குழும பள்ளிகளின் ஆசிரியர்கள், ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.  முடிவில் எஸ்பிகே ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயலாளர் காசிமுருகன் நன்றி கூறினார்.

Tags : Exposition Opening ,
× RELATED வேன் மோதி ஓட்டல் உரிமையாளர் பலி