×

பொதுமக்கள் புலம்பல் சின்னாளபட்டி அருகே குப்பைகள் எரிப்பால் சுவாச பிரச்னை

செம்பட்டி, ஏப். 3: சின்னாளபட்டி அருகே செட்டியபட்டி ஊராட்சிக்குட்பட்டது செட்டியபட்டி, கல்லுப்பட்டி, நண்பர்கள்புரம், கேபிடி நகர், நெசவாளர் காலனி, விஜயநகரம், வேளாங்கண்ணிபுரம் கிராமங்கள். இதில் கல்லுபட்டியில் சுகாதார சீர்கேடுகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இங்குள்ள பள்ளிக்கு செல்லும் நடுத்தெரு பகுதியை பொதுமக்கள் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் மாணவர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தவிர ஊராட்சி நிர்வாகம் குப்பைகளை முறையாக உரக்கிடங்கிற்கு எடுத்து செல்லாமல் காலை, மாலை நேரங்களில் தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் அப்பகுதியே புகைமண்டலமாகி காற்று மாசுபடுவதுடன் சுவாசம் சம்பந்தமான பிரச்னைகளும் ஏற்படுகின்றன. இதுகுறித்து ஆத்தூர் யூனியன் அதிகாரிகள், செட்டியபட்டி ஊராட்சி செயலரிடம் பலமுறை புகார் தெரிவித்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் கல்லுப்பட்டியில் சுகாதார சீர்கேடுகளை சரிசெய்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : fire ,Chinnakapatty ,
× RELATED டெல்லி மருத்துவமனை தீ விபத்தில் 7...