×

மார்த்தாண்டத்தில் கல்லூரி மாணவர்களிடம் தேர்தல் பிரசாரம் செய்த காங். பிரமுகர் உள்பட 4 பேரிடம் விசாரணை எம்எல்ஏ தலைமையில் தொண்டர்கள் காவல் நிலையம் திரண்டதால் பரபரப்பு

மார்த்தாண்டம், ஏப். 3: மார்த்தாண்டம்  நேசமணி கிறிஸ்தவ கல்லூரியின் முன் பகுதியில் 4 வாலிபர்கள் நின்று கொண்டு காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக மாணவ, மாணவிகளுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரித்த  வண்ணம் இருந்தனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சிலர் மார்த்தாண்டம்  காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர்  செந்தில்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று அவர்களிடம் இருந்த துண்டு பிரசுரங்களை பறிமுதல் செய்து, 4 பேரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். இதில், அவர்கள் அந்த கல்லூரி முன்னாள் மாணவர்கள் என்பதும், அதில் ஒருவர் மாணவர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ரிச்சர்டு என்பதும் தெரியவந்தது. தகவல் அறிந்து இசபல் வசந்தராணி தலைமையிலான தேர்தல்  பறக்கும் படை அதிகாரிகள் காவல்நிலையம் வந்து 4 வாலிபர்களிடமும் விசாரணை நடத்தினர். மேலும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட துண்டு பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த அச்சகத்தின் போன் நம்பரை ெதாடர்பு கொண்டு விசாரித்த அதிகாரிகள் அந்த துண்டு பிரசுரங்கள் காங்கிரஸ் கட்சி சார்பில் அச்சிடப்பட்டு, அதற்கான தொைக தேர்தல் கணக்கில் வரவு வைக்கப்பட்டதை உறுதி செய்தனர். அதன்பிறகு துண்டு பிரசுரங்களை திரும்ப ஒப்படைத்தனர். இதனிடையே தகவல் அறிந்து குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் எம்எல்ஏ மற்றும் தொண்டர்கள் காவல் நிலையம் திரண்டனர். இதையடுத்து மாணவர் காங். தலைவர் ரிச்சர்டு உள்பட 4 பேரும் விடுவிக்கப்பட்டனர்.

Tags : Kang ,college students ,persons ,police station ,MLA ,
× RELATED கல்குவாரியில் செல்பி எடுத்தப்போது...