×

தக்கலை அருகே ₹22 லட்சம், 37 பவுன் நகை சிக்கியது

தக்கலை, ஏப்.3 : தக்கலையில் வாகன சோதனையில் ₹22 லட்சம் பணம் பிடிபட்டது. பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி நிலையான கண்காணிப்பு குழு தாஜ் நிஷா தலைமையிலான குழுவினர் தக்கலையை அடுத்த பிலாங்காலை பகுதியில்  வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மேக்காமண்டபத்தில் இருந்து வந்த வங்கிகளுக்கு பணம் எடுத்துச் செல்லும் தனியார் வாகனம் வந்தது. அதை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் உரிய ஆவணம் எதுவும் இல்லாமல் ₹ 21 லட்சத்து 53 ஆயிரத்து 940 இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து பணத்தை பத்மநாபபுரம் சப் கலெக்டரிடம் ஒப்படைத்தனர். பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி பறக்கும் படையினர் தக்கலையை அடுத்த புலியூர்குறிச்சி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சென்ற காரை சோதனையிட்ட போது, 37 பவுன் தங்க நகைகள் உரிய ஆவணங்களின்றி இருந்தது. இதையடுத்து நகையை பத்மநாபபுரம் சப் கலெக்டரிடம் ஒப்படைத்தனர்.

Tags : Takalai ,
× RELATED தக்கலை அருகே சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் மாயம்