×

இரணியல் அருகே பெண்ணிடம் 1.45 லட்சம் பறிமுதல்

நாகர்கோவில், ஏப். 3: குளச்சல் சட்டமன்ற தொகுதிக்கான துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஷீலா, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் சந்திரகுமார், ரெகு, ஏட்டு ஜெயசிங் உள்ளிட்டோர் அடங்கிய கண்காணிப்பு குழுவினர் இரணியல் அருகே செட்டியார்மடம் பகுதியில் நேற்று காலை வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த நெய்யூரை சேர்ந்த பிரியா (37) என்பவரிடம் சோதனை செய்தனர். இதில் அவர் வைத்திருந்த ஹேண்ட் பேக்கில் ரூ. 1 லட்சத்து 45 ஆயிரத்து 500 இருந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த பணம் வெளிநாட்டு கரன்சியை மாற்றி கொண்டு வருவதாக தெரிவித்தார். ஆனால் அதுதொடர்பான எந்த ஆவணமும் அவரிடம் இல்லை. இதையடுத்து அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

Tags : Erani ,
× RELATED ெதரணி கிராமத்தில் சிறப்பு பொது வினியோக திட்ட குறைதீர் முகாம்