×

திருத்துறைப்பூண்டி பிறவிமருந்தீசர் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

திருத்துறைப்பூண்டி, ஏப்.3:  திருத்துறைப்பூண்டி  பிறவிமருந்தீசர் கோயில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 25ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.பின்னர் பஞ்சமூர்த்தி வீதியுலா நடைபெற்றது. இதில் கோயில் செயல் அலுவலர் முருகையன், மேலாளர் சீனிவாசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.ஒவ்வொரு நாளும் உபயதாரர்கள் சார்பில் காலை, இரவு நேரங்களில்  சுவாமி வீதியுலா நடைபெறும்.
வரும் 14ம் தேதி வெண்ணெய்த்தாழி, வரும் 16ம் தேதி தேரோட்டம், 23ம் தேதி தெப்போற்சவமும் நடைபெறவுள்ளது.

Tags : Tirathiripondi Pranavithiranesar Temple ,
× RELATED உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு