×

வைக்கோலை பயன்படுத்தி காகித தொழிற்சாலை அமைக்க முயற்சி மேற்கொள்வேன் \இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராஜ் உறுதி

திருத்துறைப்பூண்டி ஏப்.3: திருவாரூர்  மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகரபகுதிகளில் நாகை மக்களவை  இந்தியகம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராஜ் திருத்துறைப்பூண்டி ஒன்றியம்  ஆதிரெங்கத்தில் தேர்தல் பணிமனை திறப்பு விழா திமுகமாவட்டபிரதிநிதிவக்கீல்  பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. திமுக பொதுக்குழு உறுப்பினர் சிவசாமி திறந்து வைத்தார்.பின்னர் திறந்த வாகனத்தில் வேட்பாளர் செல்வராஜ் பொதுமக்களிடம்  வாக்கு  கேட்டு பேசுகையில், பயிர் காப்பீட்டு திட்டத்தை இந்தியாவிற்கே  முதன் முதலில் தமிழ்நாட்டில் நான் எம்.பியாக இருந்தபோது கொண்டு  வரப்பட்டது.திருத்துறைப்பூண்டி பகுதியில் வேளாண் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வேளாண்மை பாதுகாப்பு மண்டலமாக காவிரி டெல்டாவை முயற்சி மேற்கொள்வேன்.நரிமணத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை கொண்டு வந்தது போல் வைக்கோலை பயன்படுத்தி காகித தொழிற்சாலை கொண்டுவர முயற்சி மேற்கொள்வேன்  என்றார்.

 பின்னர் கொளுத்தும் வெயிலில்  கூட்டணிகட்சிநிர்வாகிகளுடன் திறந்தவெளிஜீப்பில் வேட்பாளர் செல்வராஜ்  திருத்துறைப்பூண்டி ஒன்றியம் ஆதிரெங்கத்தில் தொடங்கி சாலக்கடை, தலைக்காடு,  கொருக்கை, கொக்கலாடி, பாமணி, வேளூர், பழையங்குடி, கச்சனம்,அம்மனூர்,  கோமல், திருத்தங்கூர், கீராளத்தூர், ஆண்டாங்கரை, ஆலிவலம், ஆதனூர்,  பொன்னிரை, திருவழஞ்சுழி, கீரக்களூர், குன்னூர், குரும்பல், வரம்பியம்,  ஆட்டூர், எழிலூர், கொத்தமங்களம், கடியாச்சேரி, மேட்டுப்பாளையம், விளக்குடி,  ராயநல்லூர், திருப்பத்தூர், கோமாளப்பேட்டையில் வாக்கு சேகரித்தார். சென்ற இடமெல்லாம் வேட்பாளார் செல்வராஜ்க்கு  பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக  
வரவேற்பு அளித்தனர்.

Tags : Selvaraj ,Communist Party of India ,
× RELATED பெருகி வரும் மயில்களால் பயிர்கள்...