×

லால்குடி பகுதியில் ஐஜேகே ேவட்பாளர் பாரிவேந்தர் தீவிர வாக்கு சேகரிப்பு

லால்குடி, ஏப். 3: லால்குடி தொகுதியில் பெரம்பலூர் தொகுதி ஐஜேகே வேட்பாளர் டாக்டர் பாரி வேந்தர் தீவிரமாக வாக்கு சேகரித்தார். பெரம்பலூர் மக்களவை தொகுதி ஐஜேகே வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் லால்குடி சட்டமன்ற தொகுதியில் லால்குடி ஒன்றியம் தாளக்குடி கிராம த்தில் வாக்கு சேகரித்தார். அப்போது முன்னாள் அமைச்சரும், திமுக தெற்கு மாவட்ட செயலாளருமான கே.என்.நேரு கலந்து கொண்டு பேசியதாவது:
லால்குடி ஒன்றிய பகுதியான இந்த பகுதி தான் திமுகவுக்கு அதிக வாக்குகள் பெற்று தரும் பகுதி. இந்த பகுதியில் நான் வேட்பாளரக நின்ற போது அதிக வாக்குகள் அளித்து வெற்றி பெற செய்தீர்கள். தற்போது டாக்டர் பாரிவேந்தருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு அளித்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என பேசினார். அதனை தொடர்ந்து மேலவாளாடி, பம்பரம்சுற்றி, பச்சாம்பேட்டை, இடையாற்று மங்கலம் பெரியவர்சீலி, சாத்தமங்கலம், அன்பில், செங்கரையூர், கல்விக்குடி, ஆலங்குடி மகாஜனம், நத்தம், கோமாக்குடி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் வேட் பாளர் டாக்டர் பாரிவேந்தர் வாக்கு
சேகரித்து பேசியதாவது: லால்குடி தொகுதி மிகவும் பிற்படுத்தபட்ட பகுதியாகும். விவசாயம் சார்ந்த பகுதி.

இந்த பகுதியில் பல வருடங்களாக கல்வி நிறுவனங்கள், மருத்துவ நிறுவனங்கள், விவசாய கல்லூரிகள் நடத்தி பல கிராமங்களில் பொதுமக்களுக்கும், மாணவ, மாணவி களுக்கும் கல்வி சேவையும், மருத்துவ சேவையும்
செய்து வருகிறேன். விவசாயம் சார்ந்த எங்கள் கல்லூரி பேராசிரியர்கள் வழிகாட்டுதலின்படி அறுவடை செய்த தானியங்களை சேமித்து வைத்து அதிக விலை கிடைக்கும் வகையில் குளிர்பதன வசதி கிடங்கு அமைத்து தரப்படும். மத்திய அரசு அறிவிக்கும் திட்டங்களை உடனுக் குடன் பெரம்பலூர் பகுதிக்கு கொண்டு வர பாடுபடுவேன். மேலும் லால்குடி மற்றும் புள்ளம்பாடி பகுதி மக்கள் எனக்கு புதிதானவர்கள் அல்ல. என்னை வெற்றி பெற செய்தால் ஒவ்வொரு ஆண்டும் எங்களது கல்வி நிறுவனங்கள் மூலம் 300 மாணவ, மாணவிகளுக்கு கட்டணம் இல்லா இலவச கல்வியும், ஆண்டுக்கு 300 பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும் வழங்கப்படும். எனவே எனக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.வாக்கு சேகரிப்பில் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

Tags : AJKKey Parrienthare ,area ,Lalgudi ,
× RELATED லால்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 100...