புதுக்கோட்டை மகிமைநாயகி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா

புதுக்கோட்டை, ஏப்.3: புதுக்கோட்டை வடக்கு 3ம் வீதியில் மகிமைநாயகி முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பூச்சொரிதல் மற்றும் காப்புக்கட்டுதலுடன் பங்குனி திருவிழா தொடங்கி நடைபெறுவது
வழக்கம். வழக்கம்போல் இந்த ஆண்டும் கடந்த 17ம் தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. தொடர்ந்து கடந்த 24ம் தேதி காப்புக்கட்டுதலுடன் பங்குனி திருவிழா தொடங்கியது. விழா நாட்களில் தினமும் மகிமைநாயகி முத்துமாரியம்மன் சிம்ம வாகனத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.விழாவின் கடைசி நாளான நேற்று காப்பு அவிழ்த்தல் மற்றும் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

× RELATED திருப்பூரில் தியான திருவிழா