×

கந்தர்வகோட்டை பகுதியில் திருமண அழைப்பிதழ் போல் அச்சடித்து வாக்களிக்க கோரி மக்களுக்கு விழிப்புணர்வு தேர்தல் அலுவலர்கள் மும்முரம்

கந்தர்வகோட்டை, ஏப்.3:  திருமண அழைப்பிதழ்போல் அச்சடித்து வாக்களிக்க கோரும் விழிப்புணர்வை தேர்தல் அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.  கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 18 வயது நிரம்பியவர்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என கந்தர்வகோட்டை உதவி தேர்தல் அலுவலர் சசிகலா, தாசில்தார் கலைமணி, தேர்தல் துணை தாசில்தார் செல்வகணபதி மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், விஏஓவினர் விழிப்புணர்வை தினந்தோறும் பல்வேறு வழிகளில் செய்து வருகின்றனர். இதில் ஒரு கட்டமாக திருமண பத்திரிகை போல் அச்சடித்து அனைவருக்கும் வழங்கி வருகின்றனர்.

 18 வயது நிரம்பியவர்கள் கண்ணியத்துடன், பணம் ஏதும் பெற்றுக்கொள்ளாமல் வாக்களிக்க வலியுறுத்தி கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதியில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில் அதிகாரிகளின் சொல்படி வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் மும்முரம் காட்டி வருகின்றனர்.வருவாய் ஆய்வாளர் லதா தலைமையில் கிராம நிர்வாக அலுவலர்கள் கருப்பையா, வீரபாண்டியன் உட்பட பலர் நேற்று பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களில் திருமண பத்திரிகை போன்று அச்சடித்த விழிப்புணர்வு அட்டைகளை தொங்கவிட்டனர். மேலும் ஆட்டோக்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பால் பாக்கெட்டுகள் மற்றும் எரிவாயு சிலிண்டர்கள் உள்ளிட்டவைகளில் விழிப்புணர்வு வாசகங்களை ஒட்டி அனுப்பினர்.

Tags : area election officials ,Muammur ,Gandharvatai ,
× RELATED கந்தர்வகோட்டை தொகுதிக்கு மின்னணு...