×

கிராமம், கிராமமாக சென்று தீவிர பிரசாரம் மானூர் பெரியகுளம், பள்ளமடை குளங்களுக்கு தண்ணீர் திறப்பேன்

மானூர், ஏப். 3:  மானூர் வட்டாரத்தில் கிராமம் கிராமமாகச் சென்று வாக்குசேகரித்த நெல்லை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியன், மானூர் பெரியகுளம், பள்ளமடை குளம் உள்ளிட்ட அனைத்து பாசன குளங்களுக்கும் தண்ணீர் திறந்து நிரந்தர நீர்வரத்துக்கு ஏற்பாடு செய்வேன் என வாக்குறுதி அளித்தார்.  தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நெல்லை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியன், கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினருடன் மானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ரஸ்தாவில் நேற்று  பிரசாரம் துவங்கினார். தொடர்ந்து அவர், வெண்கலபொட்டல், கரம்பை, சாலைபுதூர்,  மாவடி, குற்றாலப்பேரி, மானூர் வடக்கு தெரு, லட்சுமியாபுரம், எட்டான்குளம்,  திருமலாபுரம், களக்குடி, தெற்குபட்டி, குறிச்சிகுளம், மறக்குடி,  மொட்டையனூர், உக்கிரன்கோட்டை, தெற்குசெழியநல்லூர், வடக்கு செழியநல்லூர்,  செட்டிகுறிச்சி, சமத்துவபுரம், இரண்டும்சொல்லான், அளவந்தான்குளம்,  கானார்பட்டி, பல்லிக்கோட்டை, தென்கலம்புதூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

 அப்போது அவர் பேசுகையில், ‘‘மானூர்  பகுதியில் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தரத்தீர்வு காண பாடுபடுவேன். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மானூர் பெரியகுளம், பள்ளமடை குளம் உள்ளிட்ட அனைத்து பாசன குளங்களுக்கும் தண்ணீர் திறந்து நிரந்தர நீர்வரத்துக்கு ஏற்பாடு செய்வேன்.யாதவ மக்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க குரல் கொடுப்பேன். சிறுபான்மை மக்களுக்கு என்றென்றும் பாதுகாப்பாக இருப்பேன்’’ என வாக்குறுதி அளித்தார். மாலை மானூர் தெற்கு ஒன்றிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.   வேட்பாளருடன் மாநகர் மாவட்டச் செயலாளர் தச்சை  கணேசராஜா, மகளிர் அணி  மாநில செயலாளர் விஜிலா சத்தியானந்த் எம்பி,  முத்துக்கருப்பன் எம்பி, மாநில அமைப்புச் செயலாளர் சுதா பரமசிவன், மாவட்ட  அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர்  மகபூப்ஜான், நெல்லை கூட்டுறவு பேரங்காடி முன்னாள் தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, ஜெ.  பேரவை செயலாளர் ஜெரால்ட், இளைஞர் அணி மாநகர் மாவட்டச் செயலாளர் ஹரிஹரசிவசங்கர், மகளிர் அணி  செயலாளர் சொர்ணா, ஜெ.பேரவை துணைச்செயலாளர் திருத்து சின்னதுரை,  மானூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் கங்கைமுருகன், தெற்கு ஒன்றியச் செயலாளர் லட்சுமணப்பெருமாள், வக்கீல்கள் வெயிலுமுத்து, பீர் முகைதீன் மற்றும் நிர்வாகிகள்  பாலமுருகன், ராஜேந்திரன், பாலசுப்பிரமணியன், முகமது சலீம், நெடுஞ்செழியன்,  தச்சை மணி, தேமுதிக மாவட்டச் செயலாளர் முகமதுஅலி, மாவட்ட துணைச் செயலாளர்  சிவா, மாவட்ட பொருளாளர் ஜெயச்சந்திரன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்  ஆனந்தமணி, பாமக மாவட்டச் செயலாளர் சீயோன் தங்கராஜ், அன்பழகன், தமாகா  மாவட்டத் தலைவர் சுத்தமல்லி முருகேசன், அண்ணாவிமுத்து, புதிய தமிழகம் மாவட்டச் செயலாளர் சிவக்குமார், சமத்துவ மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் சேவியர், தமமுக மாவட்டச் செயலாளர் கண்மணி மாவீரன், பாஜ ஒன்றிய துணைத்தலைவர் மலையாண்டி உள்ளிட்ட நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் என திரளானோர் பங்கேற்று வாக்கு சேகரித்தனர்.


Tags : village ,Pallamadai ,
× RELATED கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை...