×

கீழப்பாவூர் மேற்கு ஒன்றியத்தில் தீவிர பிரசாரம் ஜம்புநதி மேல்நிலை கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுவேன்

தென்காசி, ஏப். 3:  கீழப்பாவூர் மேற்கு ஒன்றியத்தில் நேற்று வாக்கு சேகரித்த தென்காதி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தனுஷ்குமார், கிடப்பில் போடப்பட்ட ஜம்புநதி மேல்நிலை கால்வாய் திட்டத்தை நிறைவேற்றித் தருவேன் என வாக்குறுதி அளித்தார்.
 தென்காசி மக்களவை தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தனுஷ்குமார் தென்காசி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கீழப்பாவூர் மேற்கு ஒன்றியத்தில் நேற்று வாக்குசேகரித்தார். தென்காசி அடுத்த வேட்டைக்காரன்குளம், ராமலிங்கபுரம், மேலமெஞ்ஞானபுரம், புளிச்சிகுளம், அருந்ததியர்புரம், முப்புலியூர், மத்தளம்பாறை, திரவியநகர், வெள்ளப்பனையேறிபட்டி, மேல அரியப்பபுரம், கீழ அரியப்பபுரம், ரகுமானியாபுரம், சிவசைலனூர், பொடியனூர், மருதடியூர், கொண்டலூர், திப்பணம்பட்டி, நாட்டார்பட்டி, பூவனூர், ஐயனூர், மடத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 7 மணி முதலே பகல் முழுவதும் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் திறந்த ஜீப்பில் நின்றவாறு தீவிர பிரசாரம் மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

 அப்போது அவர் பேசுகையில், ‘‘மக்கள் விரோத மத்திய, மாநில அரசுகளை விரைவில் அகற்ற வேண்டும். விவசாயிகளின் பிரச்னைகளை தீர்த்துவைக்க பாடுபடுவேன். பாவூர்சத்திரத்தில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க ரயில்வே மேம்பாலம் அமைத்துதருவேன். குற்றாலத்தை இந்திய சுற்றுலா வரைபடத்தில் இணைக்கப்படும். கிடப்பில் போடப்பட்ட ஜம்புநதி மேல்நிலை கால்வாய் திட்டத்தை நிறைவேற்றித் தருவேன். பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் உள்ள பிரிமியம் தக்கல்முறையை அகற்ற நடவடிக்கை எடுப்பேன். பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்’’ என வாக்குறுதி அளித்தார்.  பிரசாரத்தில் மக்களவைத் தொகுதி பொறுப்பாளர் கருப்பசாமி பாண்டியன், மேற்கு மாவட்டச் செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன், மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனி நாடார், கீழப்பாவூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் ஜெயபாலன், சிறுபான்மை பிரிவு மாவட்ட அமைப்பாளர் வீராணம் சேக் முகமது, காங்கிரஸ் கட்சி பால்துரை, முஸ்லிம் லீக் தலைமை நிலைய பேச்சாளர் முகமது அலி, முகமது முஸ்தபா, மதிமுக ஒன்றியச் செயலாளர் ராம  உதயசூரியன், சீனித்துரை, முருகேசன், பெத்தேராஜ், காசிமணி, ஜான் ஜெயபால்,  தளவாய்சாமி, அப்துல்காசிம், பால்துரை, இயேசு ஷேசுஜெகன், அருணாசலம், தங்கம்,  சமுத்திரம், மாரியப்பன், ரமேஷ், ஜெயபாலன், நாகராஜ், திமுக மாவட்டப் பிரதிநிதி ஆறுமுகசாமி, நகர பொருளாளர் ஜெயராஜ், சிறுபான்மை பிரிவு ஷேக்,  வீனஸ் முருகேசன், கலிங்கப்பட்டி சுப்பிரமணியம், காங்கிரஸ் நிர்வாகிகள்  பால்துரை, பால் என்ற சண்முகவேல், சமுத்திரம், நாட்டாண்மை ராம்ராஜ்,  தெய்வேந்திரன், சிங்கராஜ், மதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் நடராஜன்   மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்று வாக்கு சேகரித்தனர்.

பாவூர்சத்திரம்: பாவூர்சத்திரம் அடுத்த திருமலாபுரம், மடத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வேட்பாளர் தனுஷ்குமார் பேசுகையில், ‘‘தென்காசி தொகுதியைச் சேர்ந்தவர்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை சந்திக்கலாம். மக்கள் கூறும் குறைகளை உடனுக்குடன் நிவர்த்திச் செய்வேன்’’ என்றார்.சுரண்டை: பின்னர் சுரண்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தனுஷ்குமார் வாக்குசேகரித்து பேசுகையில், ‘‘மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்பட திமுகவுக்கு வாக்களியுங்கள். நான் வெற்றிபெற்றால், சுரண்டையை நகராட்சியாக தரம் உயர்த்துவேன். பீடித் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். செண்பக கால்வாய் சீரமைக்கப்படும்’’ என்றார். இதையடுத்து காமராஜர், அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்தார். பின்னர் பங்களா சுரண்டை, கீழ சுரண்டை, கோட்டை தெரு, பஸ் நிலையம் சாலை, ஆலடிபட்டி பகுதிகளில் வாக்குசேகரித்த அவருக்கு செல்லும் இடமெல்லாம் பெண்கள் ஆரத்தி எடுத்தனர். பொதுமக்கள் பட்டாசு வெடித்து வரவேற்றனர். சுரண்டை அண்ணா நகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாவட்டச் செயலாளர் டேனியல் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

Tags : Western Union ,SriLanka ,
× RELATED வந்தவாசி ஒன்றியத்தில் தீவிர வாக்கு...