×

ஸ்பிக்நகர் அருகே தொழிலாளியை மிரட்டிய இருவர் கைது

ஸ்பிக்நகர், ஏப்.3: ஸ்பிக்நகர் அருகே தனியார் நிறுவன சூப்பர்வைசரை கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.  முத்தையாபுரம் குமாரசாமி நகரை சேர்ந்த வாழவல்லான் மகன் வடிவேல் முருகன்(24). இவர் தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார். இவர் தன்னுடைய தாயாருடன் ஸ்பிக்நகர் பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ராஜீவ்நகர் முனியசாமி மகன் கட்டபுலி(38) மற்றும் பாரதிநகர் ராஜலிங்கம் மகன் சங்கரேஸ்வரன் (21) ஆகியோர் வடிவேல் முருகனிடம் குடிக்க பணம் கேட்டுள்ளனர். அவர் கொடுக்க மறுத்ததால் தகராறு செய்ததுடன் கட்டபுலி மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என்று கூறியுள்ளார்.    இதுகுறித்த புகாரின் அடிப்படையில் முத்தையாபுரம் எஸ்ஐ ராஜபிரபு வழக்குப்பதிவு செய்து கட்டபுலி, சங்கரேஸ்வரன் இருவரையும் கைது செய்தார்.

Tags : men ,Spicknagar ,
× RELATED குன்னூர் அருகே தேயிலை எஸ்டேட்டின் இரும்பு கேட் திருடிய இருவர் கைது