×

தூத்துக்குடியில் தேஜ கூட்டணி பொதுக்கூட்டம் பாம்பை கண்டு பெண்கள் அலறல்

தூத்துக்குடி, ஏப். 3: தூத்துக்குடியில் நேற்று நடந்த அமித்ஷா கூட்டத்துக்கு வந்தவர்கள், நிழலுக்காக மரத்தடியில் அமர்ந்திருந்தனர். அப்போது பாம்பு ஒன்று அப்பகுதியில் இருந்து வெளியேறியதால் பெண்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.தூத்துக்குடியில் நேற்று மதியம் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது. பாஜ தேசிய தலைவர் அமித்ஷா, முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தூத்துக்குடி மக்களவை தொகுதி பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்தர்ராஜன், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சின்னப்பன் ஆகியோரை ஆதரித்து பேசினர்.பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெண்கள், முதியவர்கள் உள்பட அதிமுகவினர், கூட்டணி கட்சியினர் குவிந்தனர். பகல் 11 மணிக்கே வெளியூரில் இருந்து கூட்டணி கட்சியினர் வாகனங்களில் அழைத்து வரப்பட்டனர். மேடையை சுற்றி போடப்பட்ட பந்தலில் குறைந்தளவே இருக்கைகள் போடப்பட்டதால் பெரும்பாலான தொண்டர்கள் பந்தலுக்கு வெளியே கொளுத்தும் வெயிலில் தவித்தனர். மதியம் 2 மணிக்குள் கூட்டம் முடிந்துவிடும் என எதிர்பார்த்த தொண்டர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஒரு மணிக்கு வர வேண்டிய பாஜ தலைவர் அமித்ஷா 2 மணிக்குதான் வந்தார். அவர் 3.20 மணிக்கு பேச்சை முடித்தார். சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக தொண்டர்கள் வெயிலில் காத்திருந்தனர். பெண்கள் பலர் திரும்பி சென்றனர். சிலர் கூட்டம், கூட்டமாக ஆங்காங்கே மரத்தடியில் அமர்ந்திருந்தனர்.

அப்போது பொதுக்கூட்டம் நடந்த இடமருகே மரத்தடியில் ஒரு இடத்தில் புதருக்குள் இருந்து வெளியே வந்த பாம்பை கண்ட தொண்டர்கள், பெண்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். தகவலறிந்து அப்பகுதியில் பாதுகாப்பு பணிக்கு வந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அதற்குள் சிலர் அந்த பாம்பை அடித்துக் கொன்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.அமைச்சரை மாற்றியமொழிபெயர்ப்பாளர்தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பாஜ தலைவர் அமித்ஷாவின் பேச்சை ராமநாதபுரத்தைச் சேர்ந்த முரளிதரன் மொழிபெயர்த்தார். அமித்ஷா ஜில்லா மினிஸ்டர் என்று கூறியதை மொழி பெயர்த்த முரளிதரன் , இம்மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் கடம்பூர் ஜனார்த்தனம் என்று கூறினார். மேடையிலிருந்த கட்சி பிரமுகர்கள் சப்தம் கொடுக்க, அமித்ஷாவின் அருகில் நின்று கொண்டிருந்த அவரது உதவியாளர் முரளிதரனை இடைமறித்தார். இதையடுத்து  சுதாரித்த முரளிதரன், மன்னிக்கவும், இம்மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் கடம்பூர் ராஜூ என்று கூறி சமாளித்தார்.


Tags : Women ,Thoothukudi Thalassery Public Wound Up ,
× RELATED தீர்த்தத்தில் மயக்க மருந்து கலந்து...