×

கோவில்பட்டி காந்தாரியம்மன் கோயிலில் 208 திருவிளக்கு பூஜை

கோவில்பட்டி, ஏப்.3: கோவில்பட்டி செல்லப்பாண்டியன் நகர் புவனகாந்தாரி அம்மன் கோயிலில் 53வது ஆண்டு பங்குனி பொங்கல் திருவிழா நடந்து வருகிறது. விழாவை முன்னிட்டு உலக மக்கள் நலன் வேண்டியும், மழை பொழிந்து விவசாயம் செழிக்கவும், நோயின்றி  அனைவரும் ஆரோக்கியத்துடன் வாழவும் வேண்டி 208 திருவிளக்கு பூஜை நடந்தது. இதையொட்டி காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடந்தது.    தொடர்ந்து இரவு 8 மணிக்கு கோவில் வளாகத்தில் கோவில்பட்டி தொழிலதிபர் கணேஷ்பாபு தலைமையில் பத்திரகாளியம்மன் கோவில் மாதர் சங்கத்தினர் திருவிளக்கு பூஜையை நடத்தினர்.    இதில் பெண்கள் 208 திருவிளக்குகள் ஏற்றி அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோயில் தர்மகர்த்தா ரவிப்பாண்டியன், தலைவர் தர்மராஜ், செயலாளர் மகேந்திரன், பொருளாளர் காந்தாரிராஜ் உள்ளிட்ட ஏராளளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.



கோவில்பட்டியில் இன்று முதல்வர் எடப்பாடி பிரசாரம்
கோவில்பட்டி, ஏப்.3: அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான கடம்பூர்ராஜூ வெளியிட்டுள்ள அறிக்கை; தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி பாஜவேட்பாளர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு தாமரை சின்னத்திலும், விளாத்திகுளம் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சின்னப்பனுக்கு இரட்டை இலை சின்னத்திலும் வாக்குகேட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு இன்று (3ம்தேதி) பகல் 12.30 மணிக்கு தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

இதற்காக மதுரையில் இருந்து காரில் வரும் முதல்வருக்கு தூத்துக்குடி மாவட்ட எல்லையான கோவில்பட்டி அருகே தோட்டிலோவன்பட்டி விலக்கில் எனது தலைமையில் இன்று காலை 11 மணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதில் மாநில அமைப்பு செயலாளர்கள் சின்னத்துரை, சி.த.செல்லப்பாண்டியன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன், கோவில்பட்டி, கயத்தாறு ஒன்றிய செயலாளர்கள் அய்யாத்துரைபாண்டியன் வினோபாஜி உட்பட கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் கலந்து கொள்கின்றனர். ஏற்பாடுகளை கோவில்பட்டி நகர அதிமுக செயலாளர் விஜயபாண்டியன் செய்துள்ளார். எனவே கோவில்பட்டியில் இன்று நடைபெறும் பிரசார கூட்டத்தில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து பங்கேற்க கேட்டுக் கொள்கிறேன்.

Tags : Tiruvalla ,Kovilpatti Gandariyamman ,
× RELATED மார்க்சிஸ்ட் நிர்வாகி வெட்டிக் கொலை