×

பறக்கும் படையினரால் ₹18.18 கோடி ரொக்கம், பொருட்கள் பறிமுதல்

காஞ்சிபுரம், ஏப்.3: காஞ்சிபுரம் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்டார். அதில் ஆண்கள் 18,59,903, பெண்கள் 19,00,485, திருநங்கைகள் 383 என மொத்தம் 37,60,771 பேர் வாக்காளிக்க உள்ளனர் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து அவர், நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது.ஜனவரி 31 2019ஐ தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு 11 சட்டமன்ற தொகுதிகளுக்கான சிறப்பு சுருக்கமுறை திருத்தத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த ஜனவரி 31ம் தேதி வெளியிடப்பட்டது. அந்த வரைவு வாக்காளர் பட்டியல்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் 36,90,997 வாக்காளர்கள் இருந்தனர்.தற்போது 69,774 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதையொட்டி, 37,60,771 வாக்காளர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளனர். தேர்தல் தொடர்பாக இதுவரை 56 புகார்கள் வரப்பெற்றன. அதில் 33 புகார்கள் தீர்க்கப்பட்டுவிட்டன. 23 புகார்கள் நிலுவையில் உள்ளன.

மேலும் கட்டணமில்லா தொலைபேசி ஹெல்ப் லைன் மூலம் 243 புகார்கள் வந்தன. அதில் 189 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டது. 54 புகார்கள் மட்டுமே நிலுவையில் உள்ளன. காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் (தனி) மக்களவை தொகுதியில் 1024 போலீசாரும், 862 போலீஸ் அல்லாத பணியாளர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பெரும்புதூர் மக்களவை தொகுதியில் 886 போலீசாரும், 806 போலீஸ் அல்லாத பணியாளர்களும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் பணிக்காக 509 துணை ராணுவப் படையினர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர். இதில் 300 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள பறக்கும் படையினரால் மாவட்டத்தில் இதுவரை ₹8.77 கோடி ரொக்கமும், ₹9.41 கோடி மதிப்புள்ள பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் பணிகளான வாக்குச்சாவடிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்லுதல், பாதுகாத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக காஞ்சிபுரம் மக்களவை தொகுதிக்கு 139 மண்டல அலுவலர்களின் கீழ் 1 எஸ்ஐ, 1 தலைமை காவலர், 6 போலீசார் என 1112 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.பெரும்புதூர் மக்களவை தொகுதிக்கு 114 மண்டல அலுவலர்களின் கீழ் 912 பேரும், தென்சென்னை தொகுதிக்கு உட்பட்ட சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு 336 பேர் என மாவட்டத்தில் 2360 தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தபால் வாக்குப்பதிவு விண்ணப்பங்கள் தாமதமாக வழங்கப்படுவதால் தேர்தல் பணிக்கு செல்லும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தங்கள் ஜனநாயகக் கடமையான வாக்குப்பதிவு செய்ய முடியாமல் போகிறது என பல்வேறு தரப்பில் இருந்தும் புகார் வந்தது.
இதை தொடர்ந்து இந்த தேர்தலில் ஏப்ரல் 6 அல்லது 7ம் தேதி தேர்தல் பணிக்கு செல்லும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வாக்குப்பதிவு செய்வதற்கான விண்ணப்பம் வழங்கப்படும் என்றார்.

Tags : troops ,
× RELATED நாமக்கல் அருகே தொழிலதிபர் வீட்டில்...