×

மதுராந்தகம் அருகே பரபரப்பு கோயிலை உடைத்து வெண்கல அம்மன் சிலை திருட்டு


மதுராந்தகம், ஏப். 3: மதுராந்தகம் அருகே கோயில் கதவை உடைத்து 2 அடி உயர வெண்கல அம்மன் சிலையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இச்சம்பவ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.மதுராந்தகம் அடுத்த பெரும்பாக்கத்தில் சுமார் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இங்கு தினமும் காலை, மாலை வேளைகளில் பூஜை நடைபெறும். கிராம மக்கள் கோயிலுக்கு சென்று, அம்மனை தரிசித்து செல்வது வழக்கம்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்ததும் கோயில் நடையை பூட்டி விட்டு பூசாரி வீட்டுக்கு சென்றார். நேற்று காலை வழக்கம்போல் கோயில் நடையை திறக்க வந்தார். அப்போது, கோயில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு 2 அடி உயரமுள்ள அம்மன் வெண்கல சிலையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. இதை அறிந்ததும் கிராம மக்கள் அங்கு திரண்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.தகவலறிந்து மதுராந்தகம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அம்மன் சிலையை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Tags : Amman ,statue theft ,Madurantham ,
× RELATED அரிமளம் அருகே நெடுங்குடி பெரியநாயகி அம்மன் கோயில் சித்திரை தேரோட்டம்