திருவெறும்பூரில் தேமுதிக வேட்பாளரை ஆதரித்து துணைமுதல்வர் தேர்தல் பிரசாரம்

திருவெறும்பூர், மார்ச் 29: திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு அதிமுக கூட்டணி கட்சி சார்பில் தேமுதிக வேட்பாளர்  இளங்கோவன் போட்டியிடுகிறார்.அவரை ஆதரித்து திருவெறும்பூர் கடை வீதியில் நேற்று தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது.

இதில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது: திருச்சி தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணி கட்சியின் தேமுதிக வேட்பாளர் இளங்கோவன் வெற்றிபெற்றதும் இந்த தொகுதி மக்களின் தேவை அறிந்து மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து நல்ல திட்டங்களை பெற்று செயல்படுத்துவார். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

Related Stories: