×

மோடி, எடப்பாடி ஆட்சியில் நாடு வளர்ச்சி அடையவில்லை தளர்ச்சிதான் அடைந்துள்ளது கி.வீரமணி பேச்சு

மன்னார்குடி, மார்ச் 29: மோடி, எடப்பாடி ஆட்சியில் நாடு வளர்ச்சியடையவிலலை, தளர்ச்சிதான் அடைந்துள்ளது என்று தி.க. தலைவர் கி.வீரமணி பேசினார். தஞ்சை  நாடாளுமன்ற  தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் வேட்பாளராக போட்டியிடும் எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்திற்கு வாக்கு கேட்டு திக சார்பில் மன்னார்குடி பந்தலடி கீழ்புறத்தில் தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திக மாவட்ட தலைவர் சித்தார்த்தன் தலைமை வகித்தார். கூட்டத்தில் தஞ்சை எம்பி தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், தி.க. மாநில செயலவை தலைவர் அறிவுக்கரசு, பொதுச்செயலாளர் துரை சந்திரசேகரன், முன்னாள் திமுக எம்எல்ஏ ராஜமாணிக்கம், மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் தலையாமங்கலம் பாலு, மதிமுக மாவட்ட செயலாளர் பாலச்சந்திரன், விசி தொழிலாளர் முன்னணி மாநில துணை செயலாளர் ரமணி ஆகியோர் பங்கேற்று பேசினர். தி.க. தலைவர் கி.வீரமணி பேசுகையில், 2016ல் நாடு முழுவதும் மோடி அலை வீசுவதாக கூறினர்.

தற்போது மோடியை வீட்டிற்கு அனுப்பும் அலைதான்  வீசுகிறது. கடந்த தேர்தலின் போது விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்துவோம் என மோடி கூறினார். ஆனால் மோடியின் ஆட்சியில்தான் பல்லாயிரக்கணக்கான் விவசாயிகள் நாடு முழுவதும் தற்கொலை செய்து கொண்ட அவலநிலை ஏற்பட்டது. ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக உறுதியளித்தார். ஆனால் 15 ரூபாய் கூட போடவில்லை. மோடி மற்றும் அதிமுக ஆட்சியில் நாடு வளர்ச்சி அடையவில்லை. மாறாக தளர்ச்சிதான் அடைந்துள்ளது.எனவே தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சனைகளில் மக்கள் நலனை மட்டும் கருத்தில்கொண்டு போராடி வரும் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஒவ்வொரு தமிழர்களும் வாக்களிக்க உறுதி ஏற்க வேண்டும்.
இவ்வாறு வீரமணி பேசினார்.

Tags : Ettapadi ,Modi ,country ,talks ,
× RELATED விவேகானந்தர் மண்டபத்தை பிரதமர் மோடி...