×

கும்பகோணம் பஸ் நிலையத்தில் நகர பேருந்தை ஸ்டார்ட் செய்தபோது ஏற்பட்ட புகையால் பயணிகள் ஓட்டம்

கும்பகோணம், மார்ச் 29: கும்பகோணம் பேருந்து நிலையத்தில் நகர பேருந்தை ஸ்டார்ட் செய்தபோது ஏற்பட்ட புகையால் பயணிகள் அலறியடித்து ஓடினர். கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தேரெழுந்துாருக்கு நகர பேருந்து நேற்று காலை 10.30 மணிக்கு புறப்பட்டது. 30க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அப்போது பேருந்தை ஸ்டார்ட் செய்தபோது திடீரென முன்பக்க பகுதியிலிருந்து புகை வந்தது.  இதனால் பயணிகள் அலறியடித்து பேருந்தில் இருந்து இறங்கினர். பின்னர் சிறிது நேரத்தில் புகை வருவது நின்றுவிட்டது. பேருந்தின் முன்பக்கமுள்ள இன்ஜின் பழுதாகி ஆயில் இல்லாமல் இருந்ததால் ஸ்டார்ட் செய்யும்போது புகை வந்தது தெரியவந்தது. பின்னர் பேருந்து ஸ்டார்ட் ஆகவில்லை. இதையடுத்து பேருந்தை சக ஓட்டிகள், பயணிகள் தள்ளிவிட்டனர். இதையடுத்து பேருந்து புறப்பட்டு சென்றது. இதுகுறித்து அரசு பேருந்து டிரைவர் கூறுகையில், கும்பகோணத்தில் இருந்து செல்லும் நகர பேருந்துகளை முறையாக பராமரிக்கப்படுவதில்லை. பேருந்திற்கு தேவையான ஆயில் உள்ளிட்ட பொருட்களை வழங்கவில்லை. நகர பேருந்துகளில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் மற்ற பேருந்துகளில் உள்ள பொருட்களை கழற்றி ரிப்பேரான பேருந்திற்கு மாட்டி விடுவர். இதேபோல் தேரெழுந்தூர் செல்லும் நகர பேருந்தில் பிரேக் சரியாக பிடிக்காமலும், இன்ஜின் ஆயில் மாற்றாததாலும் இன்ஜின் சூடாக இருந்தது. இதனால் ஸ்டார்ட் செய்யும்போது புகை எழுந்தது. பேருந்தில் திடீரென தீப்பிடித்திருந்தால் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும்.

Tags : smokers ,bus station ,Kumbakonam ,
× RELATED மாநகர பேருந்து படியில் பயணம்; ‘உள்ளே...