×

நேமம் கிராமத்தில் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி

திருக்காட்டுப்பள்ளி, மார்ச் 29: திருக்காட்டுப்பள்ளி அருகே நேமம் கிராமத்தில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது.திருவையாறு கால்நடை மருத்துவர் பாஸ்கர் தலைமையில் திருக்காட்டுப்பள்ளி கால்நடை உதவி மருத்துவர் ராமச்சந்திரன் மற்றும் மருத்துவ குழுவினர் பங்கேற்று 450 கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி போட்னர். ஐடிஎப்சி சமூக நலத்துறை மேலாளர் மேரிஅன்பரசி, ஜான்பால், அசோக், சந்துரு மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Komari ,village ,Nama ,
× RELATED பாத தரிசனத்தின் பலன் என்ன?