×

இருசக்கர வாகன பழுதுநீக்குவோருக்கு தனி நலவாரியம் அமைக்க நடவடிக்கை தஞ்சை நாடாளுமன்ற அமமுக வேட்பாளர் உறுதி

தஞ்சை, மார்ச் 29: இருசக்கர வாகன பழுதுநீக்குவோருக்கு தனி நலவாரியம் அமைத்து தருவேன் தஞ்சை அமமுக வேட்பாளர் முருகேசன் உறுதியளித்தார்.தஞ்சை அருளாநந்த நகர் கிட்டு மைதானம், தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானம் மற்றும் தஞ்சை இருசக்கர வாகன பழுதுபார்ப்போர் நலச்சங்கத்தினர், தஞ்சை மறைமாவட்ட ஆயர் இல்ல அருட்தந்தையர்களை சந்தித்து தஞ்சை நாடாளுமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் முருகேசன் நேற்று வாக்குசேகரித்தார்.பின்னர் புதிய பேருந்து நிலைய பகுதியில் வாக்கு கேட்டு முருகேசன் பேசும்போது, நான் முதல்முறையாக தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறேன். இதுவரை இல்லாத வகையில் நாடாளுமன்றத்தில் தொகுதி மக்களின் தேவைக்காக குரல் கொடுப்பேன். கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்துவிட்டனர். ஆனால் மத்திய, மாநில அரசுகள் மக்களின் வாழ்வாதாரத்துக்கு எந்தவித அடிப்படை ஆதாரத்தையும் செய்ய முன்வரவில்லை.

எனவே என்னை தேர்ந்தெடுத்தால் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் உட்பட விவசாயிகளின் உரிமைகளை நிலைநாட்ட நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன். பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க பாடுபடுவேன். பொன்னையா ராமஜெயம் அறக்கட்டளை மூலம் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஆண்டுக்கு ரூ.1 கோடி வீதம் 6 சட்டமன்ற தொகுதிக்கு ரூ.6 கோடி வீதம் 5 ஆண்டுகளுக்கு ரூ.30 கோடி செலவில் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய செலவிட திட்டமிட்டுள்ளேன் என்றார்.
முன்னதாக தஞ்சை இருசக்கர வாகன பழுது நீக்குவோர் நலச்சங்க நிர்வாகிகளை சந்தித்து முருகேசன் வாக்கு கேட்டார். அப்போது சங்க நிர்வாகிகள், இருசக்கர வாகனம் பழுது நீக்குவோருக்கு தனி நலவாரியம் அமைத்துத்தர வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். நான் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றால் இக்கோரிக்கைகளை நிறைவேற்றி தருவேன் என்று சங்க நிர்வாகிகளிடம் முருகேசன் உறுதியளித்தார்.



Tags : ammukh candidate ,
× RELATED கிராமப்புறங்களில் பெண் குழந்தைகள்...