தனியார் மில்லின் மேற்கூரையில் இருந்து விழுந்த வெல்டர் பலி

ஈரோடு, மார்ச் 29: தனியார் மில்லில் மேற்கூரையில் வேலை செய்து கொண்டிருந்தபோது தவறி விழுந்து வெல்டர் பலியானார்.ஈரோடு மாவட்டம் சிவகிரி அம்மன் கோயில் அருகே தனியார் ரைஸ் மில் உள்ளது. இந்த மில்லின் மேற்கூரையில் கடந்த 24ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் புத்தாம்பூர் கவுண்டர் தெருவை சேர்ந்த தியாகராஜன் என்ற தேவராஜன்(22) வெல்டிங் வேலை செய்து கொண்டிருந்தார்.அப்போது, கால் தவறி 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில், அவருக்கு  தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் மீட்டு சிவகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இது குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>