×

கோயில் பொங்கல் விழாவில் தீப்பந்தங்களுடன் ஊர்வலம் வந்த 10 ஆயிரம் பக்தர்கள்

சிவகிரி, மார்ச் 29: ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தலையநல்லூர் பொன்காளியம்மன்கோயில் பொங்கல்விழா நேற்று முன்தினம் நடந்தது.விழாவில் நேற்று 28ம்தேதி அதிகாலை 3 மணிக்கு தீப்பந்தம் பிடிக்கும் விழா நடந்தது. இந்த விழாவில் அம்மனின் உற்சவர் எடுப்புதேர் எனப்படும் பல்லக்கில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீப்பந்தங்களை ஏந்தி வர மத்தியில் அம்மன் திருவீதி உலா நடந்தது. முப்பாட்டு மாவிளக்கு:  இந்த கோயில் முப்பாட்டு விளக்கு எடுக்கும் உரிமை முன்பு ஒரு பிரிவினருக்கு மட்டும் இருந்தது. இவர்கள் ஊரை விட்டு சென்று விட்டதால் மற்றொரு பிரிவின் முப்பாட்டு விளக்கு எடுக்க தொடங்கினர். இதனால், மீண்டும் ஊருக்கு வந்த முதல் பிரிவினர் முப்பாட்டு விளக்கு எடுக்கும் உரிமை கோரினர். அவர்களை தீப்பந்தம் கொண்டு விரட்டியடித்தனர். இதன் நினைவாக ஆண்டுதோறும் நடைபெறும் பொங்கல் விழாவின்போது தீப்பந்தங்கள் பிடித்து ஊர்வலமாக வருகின்றனர் என கோயில் நிர்வாகிகள் கூறினர்.

Tags : pilgrims ,firecrackers ,festival ,Pongal ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...