×

கோவை காந்திபுரத்தில் பஸ் ஸ்டாண்டில் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 15 கிலோ குட்கா.

100 சதவீத வாக்களிப்பதை வலியுறுத்தி கோவை ரேஸ்கோர்ஸ் நடைபாதையில் வைக்கப்படடுள்ள விழிப்புணர்வு பேனரில் ஆர்வத்துடன் கையெழுத்திடும் பொதுமக்கள்.கோவையில் நேற்று மாநகர் மாவட்ட திமுக மகளிர் அணி,தொண்டர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்  நடந்தது. இதில் மாவட்ட பொறுப்பாளர் கார்த்திக் எம்எல்ஏ பேசினார்.கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணிக்காக பில்லர் அமையவுள்ள இடத்தில்  ஆணி அடித்து வரைபடம் வரையப்பட்டுள்ளது.மக்களவை தேர்தல் பிரசார வாகனத்திற்கு அனுமதி கேட்க கோவை கலெக்டர் அலுவலகத்தில் கொண்டு வரப்பட்ட பல்வேறு கட்சி பிரசார வாகனங்கள்.கோடை வெயில் காரணமாக ேகாவை சிங்காநல்லுார் குளத்தில் தண்ணீர் குறைந்து மண் மேடாக காட்சி அளிக்கிறது.பாலியல் குற்றங்களுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் கோவை வ.உ.சி மைதானத்தில் நுழைவதை தடுக்க போலீசார் கடந்த இரு வாரத்திற்கு மேல் தடுப்பு அமைத்து  பூட்டி சீல் வைத்துள்ளனர். மக்களவை தேர்தலையொட்டி பறக்கும்படை கெடுபிடி காரணமாக வெளியூரில் இருந்து நகை,ஜவுளி மற்றும் மொத்தமாக மளிகை பொருட்கள் வாங்க வரும் வியாபாரிகளின் எண்ணிக்கை குறைந்து விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.நேற்று கோவை பெரிய கடை வீதி ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Tags : Kovai Gandhipuram ,bus stand ,
× RELATED தேனி பழைய பஸ்நிலையத்தில் தற்காலிக நிழற்குடையை மாற்றியமைக்க கோரிக்கை