×

குன்னம், பேரளி வாக்குச்சாவடியில் தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு

பெரம்பலூர், மார்ச் 29: குன்னம் சட்டமன்ற தொகுதியில் குன்னம், பேரளி  பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பொது  பார்வையாளர் குல்கர்னி ஆய்வு செய்தார்.பெரம்பலூர்  மாவட்டத்தில் பெரம்பலூர் (தனி) மற்றும் குன்னம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இதில் பெரம்பலூர் தனித்தொகுதி பெரம்பலூர்  நாடாளுமன்ற தொகுதியிலும், குன்னம் சட்டமன்ற தொகுதி சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் உள்ளது. குன்னம் சட்டமன்ற தொகுதியில் குன்னம்,  ஆலத்தூர், செந்துறை ஆகிய 3 தாலுகாக்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மொத்தம்  320 வாக்குச்சாவடிகள் உள்ளன.இந்நிலையில் நேற்று சிதம்பரம்  நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பொது பார்வையாளர் குல்கர்னி  நேற்று குன்னம் தாலுகா அலுவலகத்துக்கு வந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வைக்கக்கூடிய ஸ்ட்ராங் ரூமை  பார்வையிட்டார். அப்போது இடவசதி, பாதுகாப்பு வசதிகளை கேட்டறிந்தார். பின்னர் குன்னம் தாலுகா பேரளி அரசு பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி  மையத்துக்கு சென்று வாக்காளர்களுக்கான அடிப்படை வசதி,  மாற்றுத்திறனாளிக்கான சாய்வுதளம் போன்ற அடிப்படை வசதிகள் தயார் நிலையில்  உள்ளதா என்று ஆய்வு செய்தார்.

குன்னம் சட்டமன்ற தொகுதிக்கான உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் (பொ)  மஞ்சுளா, குன்னம் தாசில்தார் செல்வராஜ், இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும்  வருவாய்த்துறையினர், காவல்துறையினர், தேர்தல்பிரிவு அலுவலர்கள்  உடனிருந்தனர்.
அரியலூர்: அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள  ஊடக மையம் மற்றும் ஊடக சான்றிதழ் வழங்கும் குழு அறைகளை மாவட்ட தேர்தல் அலுவலர்  விஜயலட்சுமி தலைமையில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் குல்கர்னி ஆய்வு செய்தார். ஆய்வின்போது மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான விஜயலட்சுமி தெரிவித்ததாவது: நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து பணிகளும் மேற்கொள்ள தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டு விரைந்து நடந்து வருகிறது. தகவல் கட்டுப்பாட்டு மையம், ஊடக சான்றிதழ் வழங்கும் மற்றும் ஊடக கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.மேலும் செய்தி தாள்களுக்கான நடத்தை விதிகள்- மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 121(அ)ன்படி அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் இ-பதிப்பு செய்தித்தாள்களில் கொடுக்கப்படும் விளம்பரங்களுக்கு ஊடக மையம் மற்றும் ஊடக சான்றிதழ் வழங்கும் குழு (விசிவிசி) யிடம் முன்சான்றிதழ் பெற வேண்டும். தேர்தல் நாள் மற்றும் தேர்தலுக்கு முந்தைய நாள் செய்தித்தாளில் வெளியிடப்படும் அரசியல் விளம்பரங்களுக்கு ஊடக மையம் மற்றும் ஊடக சான்றிதழ் வழங்கும் குழுவிடம் முன்சான்றிதழ் பெற வேண்டும். தவறும்பட்சத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த ஊடக மையம் மற்றும் ஊடக சான்றிதழ் வழங்கும் குழு மையமானது சுழற்சி முறையில் அலுவலர்கள் 24 மணி நேரமும் இயங்கும் என்றார்.

Tags : Kunnam ,election ,
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்கள்...