×

தரங்கம்பாடியில் குண்டும், குழியுமான தாலுகா அலுவலக சாலை

தரங்கம்பாடி,மார்ச்.29: நாகை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா அலுவலகம் செல்லும் சாலை மோசமடைந்து கிடைப்பதால் அதை சீர் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா அலுவலகம் பொறையார் சந்தைவெளி தெருவில் உள்ளது. அங்கு செல்ல பஸ் வசதி இல்லை. தரங்கம்பாடி தாலுகாவில் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. தாலுகா அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் பொறையார் வரை பஸ்சில் வந்து தாலுகா அலுவலகத்திற்கு இந்த சாலை வழியாக தான் செல்ல வேண்டும். அது போல இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் இந்த சாலை வழியாக தான் செல்ல வேண்டும்.

இந்த சாலை இப்போது மிகவும் மோசமடைந்து குண்டும், குழியுமாக இருப்பதால் தாலுகா அலுவலகத்திற்கு நடந்து செல்பவர்களும், இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களும் பெரிதும் அவதிப்படுகின்றனர். இந்த சாலையை சீர் செய்ய வேண்டும் பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் கண்டுக் கொள்ளவில்லை. அதனால் நாளுக்கு நாள் அந்த சாலை மேலும் சீர் கெட்டு வருகிறது. இனியும் அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் உடனடியாக அந்த சாலையை சீர் செய்து தார் சாலை அமைத்து தர வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கோடை காலத்தில்வியர்க்குருவை கட்டுப்படுத்தும்மாங்காய்கோடை  காலத்தில் உடலின் வெப்ப நிலையை நிலையாக வைத்து கொள்வதற் காக வியர்வையாக  வெளியாகிறது. அதே நேரம் இந்த வியர்வையின் காரணமாக உடலில் வியர்க்குரு போன்ற  தொல்லைகளும் ஏற்படுகின்றன. நமது அன்றாட சமையலில் பயன்படும் பாசிபயறை  பயன்படுத்தி வியர்க்குருவை எவ்வாறு கட்டுப் படுத்தலாம் என்பது குறித்து சில தகவல்களை பார்க்கலாம்...எரிச்சலில் இருந்து விடுபடுவது எப்படி?வெள்ளரிக்காயை தோல்  சீவி விட்டு அதை சாறாக எடுத்துக் கொள்ள வேண் டும். ஒரு ஸ்பூன் பாசி பயறு  மாவுடன், சுமார் 3 அல்லது 4 ஸ்பூன் வெள்ளரி சாறை சேர்க்க வேண்டும். இந்த  இரண்டு பொருட்களுமே உடலுக்கு குளிர்ச்சியை தரக் கூடிய ஒன்றாகும். இவ்வாறு  கலந்த கலவையை உடலில் வியர்க்குரு தாக்கம் உள்ள இடங்களில் நன்றாக பூசிக்  கொள்ள வேண்டும். சுமார் கால் மணி நேரத் திற்கு குளிக்க வேண்டும். இவ்வாறு  செய்வதன் மூலம் வியர்க்குருவால் ஏற்படும் நமைச்சல், எரிச்சல் போன்றவற்றில்  இருந்து விடுபடலாம்.

கொப்புளங்களுக்கு வேப்பிலைவியர்க்குரு, கொப்புளங்களை சமாளிக்க  வேப்பிலையை எப்படி பயன்படுத்தலாம். இதற்கு தேவையான  பொருட்கள் வேப்பிலை, மஞ்சள் பொடி. வேப்பிலையை நன்றாக அரைத்து சாறாக  எடுத்துக் கொள்ள வேண்டும்.இந்த சாற்றுடன் மஞ்சள் பொடியை தேவையான அளவு  எடுத்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின்னர் இதை வியர்க்குரு,  கொப்புளங்கள் உள்ள இடங்களில் நன்றாக மேற்பூச் சாக பூசி வர, கொப்புளங்கள்  ஆறும். வியர்க்குருவின் தாக்கம் தணியும். குளிப்ப தற்கு முன்னதாக இதை நாம்  15 நிமிடங்களுக்கு முன்பு பூசி விட்டு பின்னர் குளிக்கலாம். இதை காலை  மாலை இரு வேளைகளிலும் பயன்படுத்தலாம். நோய்கள் வராமல் தடுக்கலாம்மாங்காய் துண்டுகள் கலந்த இந்த நீரை எடுத்து கொள்வதன் மூலம்   உடலின் வெப்ப நிலையை சமன்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க  செய்கிறது. இதன் மூலம் கோடை கால பிரச்னைகளில் இருந்து விடுபட உதவுகிறது.  மாங் காய் புளிப்பு மற்றும் உஷ்ணம் தரக் கூடிய ஒன்றாகும். அதை வேக வைத்து  எடுத்துக் கொள்வதன் மூலம் அது உஷ்ணம் தராமல் உதவுகிறது. இவ்வாறு நாம்  அன்றாடம் கிடைக்கும் பொருட்களை கொண்டு கோடைக்கால நோய்கள் வராமல் உடலை  பாதுகாத்து கொள்ளலாம்.உடல் வெப்பம் அதிகரிக்கும்பச்சை மாங்காய்  சாப்பிட்டால் உடல் வெப்பம் அதிகரிக்கும், பருக்கள் வரும் என்று பலரும் அதை  வாங்கி சாப்பிட மாட்டார்கள். மாங்காயில் ஏராளமான ஊட்டச் சத்துக்கள்  நிறைந்துள்ளன. உண்மையில் இதனை சாப்பிட்டால் நாம் சந்திக்கும் பல  பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். கோடையில் அதிகப்படி யான வெப்பத்தால்  உடலின் நீர்ச்சத்தை இழந்து, அதனால் உடல் வெப்பமடை ந்து காய்ச்சல் அல்லது  சில நேரங்களில் சுயநினை வை இழக்க நேரிடும். மாங்கா யில் உள்ள சக்திவாய்ந்த  குளிர்மிக்க உட்பொருள், உடலில் நீர்ச்சத்தை சீராக பராமரித்து  இப்பிரச்னையைத் தடுக்கும்.
நெஞ்செரிச்சலுக்கு பச்சை மாங்காய்மாங்காயில்  பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது உடலில் எலக்ட்ரோலைட் அளவை பராமரிக்க  உதவும். இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுடன் வைக்க உதவும். இதய நோயின்  அபாயத்தில் இருந்து பாதுகாக்கும். பச்சை மாங்காயில் ஆவியாக கூடிய  உட்பொருட்கள் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இது செரிமான திரவத்தின்  உற்பத்தியை தூண்டும். செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.  கோடையில் வயிற்று பிரச்னைகளை வராமல் இருக்க மாங்காய் துண்டுகளை  சாப்பிடுங்கள்.

கல்லீரல் பிரச்சனையை தடுக்கும்பருவநிலை மாற்றம் அல்லது ஏதேனும் வைரஸ்  தொற்றுக்களால் உங்களுக்கு பிரச்சனை வருகிறது என்றால் பச்சை மாங்காயை  சாப்பிடுங்கள். ஏனெனில் பச்சை மாங்காயில் வைட்டமின் சி மற்றும்  ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது.
 பச்சைமாங்காய் கல்லீரல் சம்பந்தமான  பிரச்னைகளை தடுக்கும். மாங்காய் குடலை பாக்டீரியா தொற்றுக்களில் இருந்து  பாதுகாக்கும்.மாங்காயில் வைட்ட மின் சி அதிகம் உள்ளது. மாங்காயை உட்கொண்டு  வந்தால், இரத்த நாளங்க ளின் நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கும் மற்றும் புதிய  இரத்த செல்கள் உருவாகும்.முகப்பருவில் இருந்து விடுபடலாம் மாங்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்  கொலாஜனின் கூட்டுச்சேர்க்கையில் முக்கிய பங்கை வகிக்கிறது. ஆகவே மாங்காயை  சாப்பிடுவதால் சருமத்தின் பொலிவு அதிகரிப்பதோடு, முதுமையும் தள்ளிப்போகும். பச்சை மாங்காயை துண்டுகளாக்கி நீரில் போட்டு கொதிக்க  வைத்து, பின் அந்த நீரைக் கொண்டு இரவில் படுக்கும் முன் முகத்தைக் கழுவி,  மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ, முகப்பரு  பிரச்னையில் இருந்து விடுபடலாம்.

Tags : Tharangambadi ,taluk office road ,
× RELATED சிவில் நீதிபதி தேர்வில் தேர்ச்சி பெற்றவருக்கு பாராட்டு விழா