×

பேக்கரி கடைகளில் திடீர் சோதனை தடை செய்யப்பட்ட 3கிலோ பிளாஸ்டிக் கோிபேக்குகள் பறிமுதல்

நாமக்கல், மார்ச் 29: நாமக்கல்லில் பேக்கரி கடைகளில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில், தடை செய்யப்பட்ட 3 கிலோ பிளாஸ்டிக் பேக்குகளை நகராட்சி அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். நாமக்கல் நகராட்சி ஆணையாளர் சுதா, சுகாதார அலுவலர் சுகவனம், ஆய்வாளர் உதயக்குமார் மற்றும் நகராட்சி ஊழியர்கள் நேற்று சேலம் சாலை மற்றும் தட்டார தெருவில் உள்ள கடைகளில் திடீர் சோதனை செய்தனர். அப்போது அங்குள்ள 22 கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது. கடை உரிமையாளர்களுக்கு ₹4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சோதனையின் போது, 3 கிலோ பிளாஸ்டிக் கேரி பேக் பறிமுதல் செய்யப்பட்டது. நாமக்கல் நகரில் கடந்த இரு மாதங்களாக நகராட்சி அலுவலர்கள் அவ்வப்போது திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். இருப்பினும் பிளாஸ்டிக் பொருட்களை முழுமையாக ஒழிக்க முடியவில்லை. பிளாஸ்டிக் வியாபாரிகள் கிராமப்புறங்களில் வீடுகளை வாடகைக்கு பிடித்து, அங்கு பிளாஸ்டிக் கேரி பேக், டம்ளர்களை பதுக்கிவைத்து விற்பனை செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதை கண்டுபிடித்து அழிக்கும் முயற்சியில் நகராட்சி அலுவலர்கள் இறங்கியுள்ளனர்.

Tags : burger shops ,
× RELATED ராசிபுரத்தில் ஆசிரியர்களுக்கு பிரிவுபசார விழா