×

பல ஆண்டுகளாக இழுக்கும் பாலகிருஷ்ணாபுரம் பாலப்பணி  தினந்தோறும் நெரிசல், விபத்து  எப்போது முடியும் இந்த அவலம்

திண்டுக்கல், மார்ச் 29: திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தில் பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வரும் ரயில்வே பாலப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வாகனஓட்டிகள் ேகாரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் - சிலுவத்தூர் ரோட்டில் மணக்காட்டூர் செந்துரை வரைக்கும் செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது. இந்த வழித்தடத்தில் உள்ள பாலகிருஷ்ணாபுரத்தில் பழநி, கரூர், சென்னை மார்க்கமாக செல்லும் 3 ரயில்வே லைன்கள் குறுக்கிடுகின்றன. இந்த ரயில்வே லைனை கடக்க முடியாமல் வாகனஓட்டிகள் தினமும் அவதிப்பட்டு வந்தனர். இதனால் இந்த 3 ரயில்வே லைனையும் இணைத்து பாலம் கட்டுவதற்கு பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இதை ஒருவழியாக ஏற்று மத்திய, மாநில அரசுகள் சார்பில் ரூ.56 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. ஒரு கிமீ தூரத்திற்கு இப்பாலம் அமைய உள்ளது. நிலத்தின் உரிமையாளர்களுக்கு பணம் பட்டுவாடா ஆகாததால் தற்போது பாலத்தின் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பால வேலையை விரைந்து முடிக்கவும், நிலத்தின் உரிமையாளர்கள் பணம் கேட்டும் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். ஒரு வழியாக தற்போது பணம் பட்டுவாடாவிற்கான செக் நிலத்தின் உரிமையாளரந்களிடம் வழங்கப்பட்டு வருகிறது.

தொடரும் மக்கள் அவதி
பாலகிருஷ்ணாபுரத்தில் 5 ரயில்வே லைன்களையும் இணைக்கும் பாலம் கட்டும் பணி தாமதம் பட்டு வருவதால் பொதுமக்கள் 5 அடி ரோட்டில் எம்.எஸ்.பி பள்ளி வழியாக செல்ல வேண்டியுள்ளது. 54 கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும், வாகனஓட்டிகளும் இந்த ரோட்டில் செல்வதால் தினமும் போக்குவரத்து நெரிசல், விபத்துக்களும் நடக்கிறது. குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகள் தினமும் விபத்தில் சிக்கும் அவல நிலை ஏற்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை எடுத்து கூறியும் ரயில்வே நிர்வாகம் மக்களின் துயரத்தை கண்டு கொள்ளாமல் உள்ளது. இதனால் வாகனஓட்டிகள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். தாமதமாகும் சுரங்க திறப்பு 3 ரயில்வே கேட்டிலும் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதையை திறந்தால் பயணிகள் சிரமமின்றி சென்று வருவார்கள். ஆனால் ரயில்வே நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து இதை திறக்காததால், பொதுமக்கள் சொல்ல முடியாத துயரத்தில் உள்ளனர்.

Tags : Balakrishnapuram Palakkad ,accident ,
× RELATED விருதுநகர் குவாரி விபத்தில்...