×

சின்னக்கலையம்புத்தூரில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி 2 ஆயிரம் மாணவிகள் பங்கேற்பு

பழநி, மார்ச் 29: சின்னக்கலையம்புத்தூரில் நடந்த வாக்காளர் விழிப்புணர்வு பேரணியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர். நாடு முழுவதும் 7 கட்டங்களாக 14வது நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ம் தேதி 39 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. இதன்படி நேற்று பழநி அருகே சின்னக்கலையம்புத்தூரில் உள்ள அருள்மிகு பழநியாண்டவர் மகளிர் கல்லூரியின் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. பழநி கல்லூரியின் முதல்வர் புவனேஸ்வரி வரவேற்று பேசினார். பழநி கோயில் இணை ஆணையர் செல்வராஜ் தலைமை வகித்து பேரணியை துவக்கி வைத்தார். துணை ஆணையர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். பேரணியில் 100 சதவீத வாக்களிக்க வேண்டும். வாக்களிக்க வேண்டியதன் அவசியம், வாக்களிப்பின் நன்மைகள் குறித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டியதை வலியுறுத்தி விழிப்புணர்வு நாடகம் நடத்தப்பட்டது. ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக பேரணி சென்றது. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags : Vanniar ,
× RELATED சென்னை பரங்கிமலையில் சீல்...