×

புதிய தமிழகம், தேமுதிகவினர் திமுகவில் ஐக்கியம்

சங்கரன்கோவில், மார்ச் 29:  சங்கரன்கோவிலில் புதிய தமிழகம், தேமுதிகவினர் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.தென்காசி மக்களவை தொகுதியில், 28 ஆண்டுகளுக்கு பிறகு திமுக நேரடியாக போட்டியிடுகிறது. திமுக வேட்பாளர் தனுஷ்குமாரை ஆதரித்து அக்கட்சி தொண்டர்கள், மிகுந்த வேகத்துடன் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று திமுக மாவட்ட செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன் முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சங்கரன்கோவில் ஒன்றியம் கரிவலம்வந்தநல்லூரை சேர்ந்த தேமுதிக முன்னாள் செயலாளரும், தற்போதைய கூட்டுறவு வங்கி துணை தலைவருமான முத்துராஜ், புதியதமிழகம் குருவிகுளம் விவசாய அணி செயலாளர் மனுவேல்ராஜன், மரத்தோணி செல்லச்சாமி, வீரணாபுரம் சண்முகவேல், முத்துக்குமார், தினேஷ்குமார், குவளைக்கண்ணி அசோக், மரத்தோணி கிளை தலைவர் அலெக்ஸ் ஆகியோர் திமுகவில் இணைந்தனர். நிகழ்ச்சியில் ஜெயக்குமார், ஒன்றிய செயலாளர்கள் லாலா சங்கரபாண்டியன், கடற்கரை, சேர்மத்துரை,  நகர செயலாளர் சங்கரன், பொதுக்குழு உறுப்பினர் அன்புமணி கணேசன், முன்னாள் நகர செயலாளர் ராஜதுரை, வக்கீல்கள் முத்துராமலிங்கம், கண்ணன், நிர்வாகிகள் குமார், ராஜ், சரவணன், ராசையா, செல்வம், மாரியப்பன், பொறியாளர் அணி சங்கர், ஸ்டீபன்ராஜ், உதயகுமார், சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Tags : Tamil Nadu ,
× RELATED அனைத்து நியாயவிலைக் கடைகளிலும்...