×

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ரூ.1.41 கோடி உண்டியல் காணிக்கை

திருச்செந்தூர், மார்ச் 29:  திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் உண்டியல் எண்ணும் பணி நடந்தது. இணை ஆணையர் குமரதுரை தலைமையில் உதவி ஆணையர்கள் நெல்லை சங்கர், திருச்செந்தூர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர். நெல்லை கிழக்கு ஆய்வர் ராமலட்சுமி, பாளை மேற்கு ஆய்வர் முருகானந்தம், சிவகாசி பதினொண் சித்தர் மடம் பீடம் குருகுலம் வேதபாடசாலை உழவாரப்பணி குழுவினர் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர். இதில் நிரந்தர உண்டியலில் ரூ.1 கோடியே 34 லட்சத்து 44 ஆயிரத்து 310ம், கோசாலை உண்டியல் ரூ.19 ஆயிரத்து 480ம், யானை பராமரிப்பு உண்டியலில் ரூ.81 ஆயிரத்து 464ம், அன்னதான உண்டியலில் ரூ.5 லட்சத்து 91 ஆயிரத்து 088ம், சிவன் கோயில் அன்னதான உண்டியலில் ரூ.6 ஆயிரத்து 345ம் கிடைத்தது. தங்கம் 1105 கிராமும், வெள்ளி 18,540 கிராமும், பித்தளை 19,700 கிராமும் கிடைத்துள்ளது. மேலும் 319 அயல்நாட்டு நோட்டுகளும் கிடைத்துள்ளது.

Tags : Tiruchendur Murugan ,
× RELATED திருச்செந்தூர் முருகன் கோயில் நிலங்களை அளவிடும் பணி துவக்கம்