×

பாரதியார் அருங்காட்சியகத்தில் கரகாட்டக்கலை பயிலரங்கம்

புதுச்சேரி, மார்ச் 29:  புதுச்சேரி அரசு கலை, பண்பாட்டுத்துறை சார்பில் கரகாட்டக்கலை பயிலரங்கம் ஈஸ்வரன் கோயில் வீதியில் உள்ள பாரதியார் நினைவு அருங்காட்சிகம் - ஆய்வு மையத்தில் நேற்று துவங்கியது.
 கலை பண்பாட்டுத்துறை அலுவலக கண்காணிப்பாளர் கலியபெருமாள் பயிலரங்கை தொடங்கி வைத்தார். லலிதா ஆர்ட் கிராப்ட் கலைமாமணி மாலதி செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் 30க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். சென்னை மாற்று ஊடக மையத்தைச் சேர்ந்த புதுமைராஜா, பிரதீப் ஆகியோர் கரகாட்ட பயிற்சி அளித்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், தமிழர்களின் மிக தொன்மை வாய்ந்த கலை வடிவமான கரகாட்டக்கலை மறைந்து வருகின்றது. இந்த நிலையில் இருந்து அதனை பாதுகாக்கவும், புதிய கலைஞர்களை உருவாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, கரகாட்டக்கலையை அழியாமல் பாதுகாக்க இப்பயிலரங்கம் நடத்தப்படுகிறது, என்றனர். நேற்று துவங்கிய கரகாட்ட பயிலரங்கம் 31ம் தேதி வரை நடக்கிறது. இதன் நிறைவு நாளில் பயிற்சி பெற்ற மாணவர்கள் கரகாட்டக்கலை நிகழ்ச்சியை வழங்குகின்றனர். பயிற்சி பெற்றவர்களுக்கு கலை, பண்பாட்டுத்துறை இயக்குநர் கணேசன் சான்றிதழ் வழங்கவுள்ளார்.

Tags : Karakatakkalai workshop ,Bharathiar Museum ,
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...