×

குண்டும், குழியுமான தேவானூர்- மாணிக்கபுரம் சாலையை சீரமைக்க கோரிக்கை

தா.பேட்டை மார்ச் 28: தேவானூரிலிருந்து மாணிக்கபுரம் செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தா.பேட்டை ஒன்றியம் தேவானூரிலிருந்து மாணிக்கபுரத்திற்கு செல்லும் தார்சாலை மிகவும் பழுதடைந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் செந்தில்குமார் கூறும் போது, தேவானூரிலிருந்து மாணிக்கபுரம் செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்வோர் மிகுந்த சிரமம் அடைகின்றனர். இரவு நேரத்தில் நடந்து செல்வோர் சாலையில் உள்ள பள்ளத்தில் தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே பழுதடைந்துள்ள சாலையை சீரமைத்து புதிய தார் சாலை அமைத்து தர வேண்டும் என்று கூறினார்.

Tags : road ,Thilavu-Thanavoor-Manikkapuram ,
× RELATED போக்குவரத்துக்கு லாயக்கற்று...