×

தஞ்சை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட திமுக ேவட்பாளர்கள் உட்பட 12 பேரின் வேட்புமனுக்கள் ஏற்பு

தஞ்சை, மார்ச் 28: தஞ்சை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட திமுக ேவட்பாளர் உட்பட 12 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது. தஞ்சை நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடக்கிறது. இதையொட்டி திமுக, தமாகா, அமமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட 26 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடந்தது. மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும், கலெக்டருமான அண்ணாதுரை முன்னிலை வகித்தார். இதில் வேட்பாளர்கள் திமுக பழநிமாணிக்கம், தமாகா நடராஜன், அமமுக முருகேசன், மக்கள் நீதி மய்யம் சம்பத் ராமதாஸ் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பங்கேற்றனர். இறுதியாக 12 மனுக்கள் ஏற்று கொள்ளப்பட்டது. 14 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. திமுக வேட்பாளர்கள் பழநிமாணிக்கம், தமாகா வேட்பாளர் நடராஜன், அமமுக வேட்பாளர் முருகேசன், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சம்பத் ராமதாஸ், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கிருஷ்ணகுமார் ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதை தவிர பகுஜன்சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த ஸ்டாலின், சுயேட்டை வேட்பாளர்கள் பனசைஅரங்கன், விஜயகுமார், செல்வராஜ், சமத்தா, அப்துல்புகாரி, முத்துவேல் ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்று கொள்ளப்பட்டது.

Tags : nominees ,DMK ,elections ,Tanjai ,
× RELATED வெளிமாநிலத் தொழிலாளர்களின் ரயில்...