×

விவசாய சங்கம் முடிவுசுட்டெரிக்கும் வெயிலால் சாலையோர பூங்காக்களில் காய்ந்து வரும் புல், செடிகள்

தஞ்சை, மார்ச் 28: சுட்டெரிக்கும் வெயிலால் தஞ்சை சாலையோர பூங்காக்களில் புல், செடிகள் காய்ந்து சருகாகி வருகிறது. எனவே போதுமான தண்ணீர் பாய்ச்சி புல், செடிகளை காப்பாற்ற வேண்டுமென சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி மற்றும் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடக்கிறது. இதையடுத்து தேர்தல் ஏற்பாடுகள் ஒருபுறம் தீவிரமாக நடந்து வருகிறது. மறுபுறம் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தை துவக்கிவிட்டன. தஞ்சை நகரில் திமுக, அதிமுக ஆகிய முக்கிய அரசியல் கட்சிகள் மாநகர பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. காலை, மாலை இருவேளைகளிலும் வாக்கு கேட்டு வேட்பாளர்கள் கட்சியினர் புடைசூழ செல்கின்றனர். மதியம் சுட்டெரிக்கும் வெயிலால் ஓய்வு எடுத்து கொள்கின்றனர். மேலும் கடந்த சில நாட்களாக தஞ்சையில் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வருகிறது. நேற்று 99 டிகிரி வெயில் பதிவானது. தினமும் காலை 11 மணிக்கே வெயிலின் தாக்கம் தெரிய துவங்கி விடுகிறது. மாலை 5 மணி வரை இது தொடர்கிறது. இதனால் மதிய வேளைகளில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்துவிடுகிறது.

இத்தகையை கடுமையான வெயிலின் தாக்கத்தால் நகரில் சாலையோர பூங்காக்கள் நீரின்றி காய்ந்து கருகி வருகின்றன. தஞ்சை பெரிய கோயில் அருகே உள்ள சோழன் சிலை அமைந்துள்ள பூங்காவில் புல், செடிகள் காய்ந்து சருகாகி வருகின்றன. அங்குள்ள செயற்கை நீரூற்று வறண்டு கிடக்கிறது. இதுபோல் நகரின் பல்வேறு பகுதிகளில் கவனிப்பாரின்றி பூங்காக்கள் சிதிலமடைந்து வருகின்றன. எனவே உடனடியாக வறட்சியின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் சாலையோர பூங்காக்கள், செடி, கொடிகள், புல் தரைகளை நீர் விட்டு காப்பாற்ற மாநகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : plants ,roadside parks ,
× RELATED பீட்ரூட் கீரை மசியல்