×

கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் பொது பார்வையாளர் ஆய்வு

தஞ்சை, மார்ச் 28: தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில்  இயங்கும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையை தேர்தல் பொது பார்வையாளர் ஜெகதீஸ்வர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தஞ்சை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பணிகளை பார்வையிட பொது பார்வையாளராக தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த முதன்மை செயலாளரான ஜெகதீஸ்வர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரது தொலைபேசி எண் 9385285804 ஆகும். இந்நிலையில் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் தேர்தல் கண்காணிப்பு பறக்கும் படையினரின் வாகனங்கள் ஜிபிஎஸ் கருவி மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதை கலெக்டர் அண்ணாதுரை, தேர்தல் பொது பார்வையாளர் ஜெகதீஸ்வர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ேமலும் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் வாக்காளர் சேவைக்கான மாவட்ட தொடர்பு மையம், தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் இயங்கி வரும் ஊடக சான்று, கண்காணிப்பு அறையில் தொலைக்காட்சி விளம்பரங்கள் கண்காணிக்கப்படுவது, வாக்காளர் சேவை மையத்தில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் விவிபேட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்முறை விளக்கத்தை தேர்தல் பொது பார்வையாளர் பார்வையிட்டனர். அப்போது டிஆர்ஓ சக்திவேல் உடனிருந்தார்.

Tags : Viewer ,election control room ,Collector ,
× RELATED வாக்காளர்களுக்கு விநியோகம் செய்த ₹22 ஆயிரம் சிக்கியது அணைக்கட்டு அருகே