×

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேர் திருவிழா புதுகைக்கு 8ம் தேதி உள்ளூர் விடுமுறை

புதுக்கோட்டை, மார்ச் 28: நார்த்தாமலை முத்து மாரியம்மன் கோயில் தேர் திருவிழாவையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்துக்கு வரும் 8ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டர் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா நார்த்தாமலை கிராமத்தை சேர்ந்த முத்து மாரியம்மன் கோயில் தேர் திருவிழா வரும் 8ம் தேதி நடக்கிறது. இதையொட்டி 8ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதற்கு பதிலாக ஏப்ரல் 27ம் தேதியன்று பணி நாளாகும். வழக்கமாக சனிக்கிழமைகளை பணி நாளாக கொண்ட அலுவலகங்களுக்கு 28ம் தேதின்று பணிநாள் எனவும் அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறை நாளன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாவட்ட கருவூலகம் மற்றும் சார்நிலை கருவூலகங்களும் குறைந்தபட்ச அலுவலர்களுடன் அரசின் பாதுகாப்பை கருதியும், அவசர அலுவல்கள் மேற்கொள்ளும் பொருட்டும் திறந்திருக்கும். மேலும் அரசு பொதுத்தேர்வுகள், அறிவித்த தேதிகளில் நடைபெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : holiday ,festival festival ,Natharamai Muthuramaniamman Temple ,
× RELATED மே மாத விடுமுறையை முன்னிட்டு வண்டலூர்...