×

தேர்தல் அதிகாரிகளின் கெடுபிடியால் போஸ்டர், பேனர் அச்சடிக்கும் தொழில் மந்தம் தொழிலாளர்கள் வருத்தம்

புதுக்கோட்டை, மார்ச் 28: தேர்தல் ஆணையத்தின் கெடுபிடியால் போஸ்டர், பேனர் தொழில் கடுமையாக பாதிப்படைந்துள்ளதாக அந்த தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்கள் தெரிவித்துள்ளனர். இந்திய நாடாளுமன்றத்தின் 17வது பொதுத்தேர்தல் வரும் 11ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்கு  எண்ணிக்கை வரும் மே மாதம் 23 ம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வரும் 18ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.தேர்தலில் வெற்றி பெற வேட்பாளர்கள் தற்போது சூறாவழி பிரசாரம் செய்து வருகின்றனர்.இந்நிலையில் அரசியல் கட்சிகள் செயல்வீரர்கள் கூட்டம், முக்கிய பிரமுகர்கள் வருகை, சாதனை விளக்கம் உள்ளிட்டவையை நோட்டிஸ், போஸ்டர், பிளக்ஸ்கள் அடித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்துவார்கள். தேர்தல் ஆணையத்தின் கடுமையான கெடுபிடியால் தற்போது அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் பிளக்ஸ், போஸ்டர்கள் அடிக்கவில்லை. பிரசாரம் செல்லும் பகுதியியை சிறிய அளவு நோட்டீசில் அச்சடித்து வினியோகம் செய்கின்றனர்.

இதனால் பிரின்ட் பிரஸ் வைத்திருப்பவர்கள் பெரிய அளவு பாதிப்புகளை சந்திக்கின்றனர். மேலும் பிளக்ஸ் அடிக்கும் தொழில் தற்போது மிகுந்த பாதிப்பை சந்தித்து வருவதாக அந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றன்றனர். அரசியல் கட்சிகள் செலவுக்கு கண்காணிக்கப்படும் என்பதால் பிளக்ஸ் வைப்பதை தவிர்த்து விட்டனர்.இது ஒரு புரும் இருந்தாலும், பொது நிகழ்ச்சிகள், கடைகளின் விளம்பரங்களுக்கு பிளக்ஸ் பேனர்கள் வைப்பார்கள். தேர்தல் ஆணையத்தின் கெடுபிடியால் வியாபார நிறுவனங்கள், பொது நிகழ்ச்சி நடத்துபவர்கள் பிளக்ஸ் பேனர்களை அச்சடிப்பதை தவிர்த்து வருகிறனர். இதனால் இந்த தொழில் மிகவும் தொய்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். இகுகுறித்து இந்த தொழில்களில் ஈடுபட்டு வருபவர்கள் கூறியதாவது: பல்வேறு விளம்பரங்களுக்கு நோட்டிஸ், போஸ்டர், பிளக்ஸ் பேனர்கள் அச்சடித்து வந்தோம். தற்போது தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருந்து வருவதால் எந்த பணியும் நடக்கவில்லை. திருமணம், கோயில் திருவிழாவை தவிர்த்து எந்த ஆடர்களும் வருவதில்லை.தற்போது வெயில் வெளுத்து வாங்குவதாலும், முகூர்த்த நாள் இல்லாமல் இருப்பதாலும் இதற்கும் மக்கள் வருவதை நிறுத்திவிட்டனர். இதனால் எங்கள் நிறுவனங்கள் வெறிச்சோடி கணப்படுகிறது. தேர்தல் முடிந்த பிறகுதான் எங்கள் தொழில் நிலைமை சீரடையும் என்றனர்.

Tags : banner crafting industry bosses ,election officials ,
× RELATED தேர்தல் விதிமீறல்: திரிபுராவில் 26 அதிகாரிகள் சஸ்பெண்ட்