×

மலைக்குடிப்பட்டி அரசு தொடக்கப்பள்ளி ஆண்டு விழா

இலுப்பூர், மார்ச் 28: இலுப்பூர் அருகே உள்ள மலைக்குடிப்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா, விளையாட்டு விழா, முத்தமிழ் மன்ற விழா நடந்தது.தலைமை ஆசிரியர் நெப்போலியன் தலைமை வகித்தார். அன்னவாசல் வட்டார வளமைய மேற்பார்வையாளர் கோவிந்தராஜூ, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் செல்லதுரை முன்னிலை வகித்தனர். ஆசிரியை சபீனா வரவேற்றார். ஜேனிட்டா ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் சிலம்பாட்டம், மாணவர்களின் பரதநாட்டியம் மற்றும் கலைநிகழ்ச்சி நடந்தது. விழாவில் பங்கேற்ற நாட்டுப்புற பாடகர்கள் செந்தில்கணேஷ்- ராஜலட்சுமிக்கு பொதுமக்கள் சார்பில் விருது வழங்கப்பட்டது. விழாவில் பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

Tags : Celebration ,Peacock State Government ,
× RELATED பெரியார் பிறந்த நாள் விழா