×

54 வேட்பு மனுக்களில் 43 ஏற்பு: 11 நிராகரிப்பு வாபஸ் பெற நாளை கடைசி

கரூர், மார்ச் 28: கரூர் நாடாளுமன்ற தொகுதியில்  மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம் ஆகிய 3 தொகுதிகள் இடம் பெற்றிருக்கின்றன. மேலும் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், திருச்சி மாவட்டம் மணப்பாறை, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகள் என மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்றிருக்கின்றன. ஏப்ரல் 18ம்தேதி தேர்தல் நடைபெறுகிறது. வேட்பு மனுதாக்கல் கடந்த 19ம்தேதி தொடங்கியது. மனு தாக்கல் மந்தமாகவே இருந்து வந்த நிலையில் கடைசி நாளான 26ம்தேதி அன்று ஒரே நாளில் 32 வேட்பாளர்கள், 35 மனுக்களை தாக்கல் செய்தனர். மொத்தமாக 49 வேட்பாளர்கள் 54 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.  வேட்பு மனுக்கள் பரிசீலனை நேற்று கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. தேர்தல் பொது பார்வையாளர் பிரசாந்த்குமார் முன்னிலை வகித்தார். தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான அன்பழகன் பரிசீலனையை நடத்தினார். ஒவ்வொரு வேட்பாளர் வாரியாக வாசிக்கப்பட்டு அவர்களது மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதா, நிராகரிக்கப்பட்டதா என்றும், அவ்வாறு நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணங்கள் என்னென்ன என்றும் அனைத்து வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்தார்.இதில் அகில இந்திய மக்கள் கழகத்தின் சார்பில் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தவரின் வேட்பு மனுவும், சுயேட்சை வேட்பாளர் ஒருவரின் வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டது. மேலும் ஒரே வேட்பாளர் ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்து, அவரின் ஒரு மனு ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் மீதம் உள்ள மனுவும், அதேபோல வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பாளர்களுக்கு மாற்று வேட்பாளராக மனுதாக்கல் செய்தவர்களின் மனுவும் என மொத்தம் 9 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆக மொத்தம் 54 வேட்பு மனுக்களில் 11 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 43 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.இதில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, அதிமுக வேட்பாளர் தம்பிதுரை, அமமுக வேட்பாளர் தங்கவேல் உள்பட 43 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வின்போது துணை தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான சூர்யபிரகாஷ், உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர். வேட்பு மனுக்களை வாபஸ் பெற நாளை (29ம்தேதி) கடைசி நாள் ஆகும்.வாக்காளர்கள் 13,65,802 -     வாக்குச்சாவடிகள் 1,650கரூர் எம்பி தொகுதியில் உள்ள வாக்காளர்கள், வாக்குச்சாவடிகள் விபரம் (சட்டமன்ற தொகுதி வாரியாக):அரவக்குறிச்சி  சட்டமன்ற தொகுதி: வாக்குச்சாவடி 250. ஆண் 97435, பெண் 10,3894, இதர 1. மொத்தம் 20,1330. கரூர் சட்டமன்ற தொகுதி: வாக்குச்சாவடி 261. ஆண் 1,10,416,  பெண் 1,20,136, இதர 5, மொத்தம் 2,30,557. கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதி: வாக்குச்சாவடி 253. ஆண் 99,457, பெண் 1,02,995, இதர 44. மொத்தம் 2,02,496. வேடசந்தூர் தொகுதி: வாக்குச்சாவடி 307, ஆண் 1,23,199, பெண் 1,27,267, இதர 2, மொத்தம் 2,50,468. மணப்பாறை தொகுதி: வாக்குச்சாவடி 324, ஆண் 1,34.027, பெண் 1.37,945, இதர 7, மொத்தம் 2,71,979. விராலிமலை தொகுதி: வாக்குச்சாவடி 255, ஆண் 1,04,581, பெண் 1,04,386, இதர 5, மொத்தம் 2,08,972. கரூர்  பாராளுமன்ற தொகுதியில் மொத்த வாக்குச்சாவடிகள் 1,650, ஆண் வாக்காளர்கள்  6,69,115, பெண் வாக்காளர்கள் 6,96,623, இதர வாக்காளர்கள் 64, மொத்தம்  13,65,802.

Tags :
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...