×

அம்மாபேட்டை அருகே வைக்கோல் போரில் தீ விபத்து

பவானி, மார்ச் 28: அம்மாபேட்டை அருகே வைக்கோல் போரில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது.பவானி அருகே அம்மாபேட்டை மொண்டிபாளையத்தைச் சே்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி ஜெயாம்மாள். விவசாயி. இவர் வளர்த்து வரும் கால்நடைகளுக்காக தனது வீட்டுக்கு முன்பு 3.5 ஏக்கரில் வைக்கோல் வாங்கி அடுக்கி வைத்திருந்தார்.  இந்த வைக்கோல் போரில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. வைக்கோலில் பற்றிய தீ மளமளவென பரவி கொளுந்து விட்டு எரியத் துவங்கியது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் பவானி தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர்.  சம்பவ இடத்துக்கு வந்த நிலைய அலுவலர் காந்தி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள்  சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.


Tags : fire ,straw battle ,Ammapettai ,
× RELATED குடோனில் திடீர் தீ விபத்து