×

சிவகாசியில் தேமுதிக வேட்பாளர் அறிமுக கூட்டம்

சிவகாசி, மார்ச் 28: சிவகாசியில் அ.தி.மு.க., கூட்டணி சார்பில் விருதுநகர் எம்பி தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகர்சாமி அறிமுக கூட்டம் நேற்று நடைபெற்றது. சந்திரபிரபா எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசுகையில், ‘‘ஜெயலலிதா வழியில் தமிழக முதல்வர் பழனிச்சாமி சிறப்பான ஆட்சி நடத்தி வருகின்றார். பட்டாசு தொழிலுக்கு அதிமுக அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும். பட்டாசு தொழிலுக்கு தமிழக முதல்வரும், துணை முதல்வரும் பாதுகாப்பாக உள்ளனர். இந்த தேர்தல் முடிந்தவுடன் உள்ளாட்சி தேர்தல் வந்து விடும். எனவே அ.தி.மு.க.வினர் இதனை ஒரு பயிற்சி களமாக மேற்கொண்டு சிறப்பாக பணியாற்ற வேண்டும். அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை அனைத்துமே செய்யக்கூடிய திட்டங்கள். விருதுநகர் தொகுதியில் அனைத்து கூட்டணி கட்சியினரும் மிக சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்து தேர்தல் பணியாற்றுகின்றனர்’’ என்று தெரிவித்தார்.


Tags : DMK ,candidate ,debut meeting ,Sivakasi ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி