×

திமுக அறிவித்தபடி விவசாய கடன்கள் ரத்து செய்யப்படும் தொடர்பை துண்டிக்க சொன்னதால் ‘டென்ஷன்’

ராஜபாளையம், மார்ச் 28: சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றவுடன், அதிமுக ஆட்சி கலைக்கப்பட்டு திமுக ஆட்சி வரும். முதல்வராக ஸ்டாலின் பதவியேற்பார். அவர் பதவியேற்ற பின்னர் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று, சாத்தூர் ராமச்சந்திரன் எம்எல்ஏ தெரிவித்தார்.தென்காசி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் திமுக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. தென்காசி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில், எம்.எல்.ஏக்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கப்பாண்டியன் மற்றும் தென்காசி தொகுதி திமுக வேட்பாளர் தனுஷ்.எம்.குமார் மற்றும் கூட்டணி கட்சியினர், தொண்டர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் பேசிய சாத்தூர் ராமச்சந்திரன், ‘‘18 சட்டமன்ற தேர்தலிலும் திமுக வெற்றி பெற்றவுடன், அதிமுக ஆட்சி கலைக்கப்பட்டு திமுக ஆட்சி வரும். முதல்வராக ஸ்டாலின் பதவியேற்பார். அவர் பதவியேற்ற பின்னர் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். ஸ்டாலின் கலைஞரின் பிம்பம். இறுதிவரை நாட்டு மக்களுக்கு நல்லது செய்த தலைவர் கலைஞர். அப்பாவிற்கு பிள்ளையான ஸ்டாலின் தப்பாமல் பிறந்திருக்கிறார்.

இன்னும் 25 வருடங்களுக்கு திமுக தான் ஆட்சியில் இருக்கும். இன்னும் இரண்டு மாதங்களுக்கு பின்னர் நாம் ஆளும் கட்சியாக இருப்போம். தற்போது கூட்டுறவு துறை உள்ளிட்ட அனைத்திலும் அதிமுகவினரே பதவிகளில் உள்ளனர். கொள்ளை அடித்து வருகின்றனர். நாம் ஆட்சிக்கு வந்து நாட்டு மக்களுக்கு பணியாற்றுவோம். ராஜபாளையத்திற்கு புற வழிச்சாலை திட்டத்திற்கு மத்திய அரசுதான் நிதி ஒதுக்க வேண்டும். 2004ல் காங்கிரசுக்கு பதில் தமிழ் மாநில காங்கிரஸ் இருந்தது. அப்போது விருதுநகரில் நடந்த கூட்டத்திற்கு பின்னர் அக்கூட்டணி வெற்றி பெற்றது. இதே போல இக் கூட்டணி வெற்றி பெறுவதும் உறுதி’’ என்று தெரிவித்தார்.

Tags : DMK ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...